இங்க பாருடா...கதவிடுக்கில் இவ்ளோ பெரிய பாம்பு, கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ

Snake Video: வீட்டு கதவின் இடுக்கில் மாட்டிக்கொண்ட பாம்பு படம் எடுத்து ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 30, 2022, 09:44 AM IST
  • நபரை படமெடுத்து மிரட்டிய பாம்பு.
  • வீட்டின் கதவிடுக்கில் அமர்ந்த நாகப்பாம்பு.
  • கிடுகிடுக்க வைக்கும் இன்றைய வைரல் வீடியோ.
இங்க பாருடா...கதவிடுக்கில் இவ்ளோ பெரிய பாம்பு, கிடுகிடுக்க வைக்கும் வைரல் வீடியோ title=

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து முடியாக சில விஷயங்களையும், சில பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். அதன்படி இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, அதேபோல் சில சமயம் சோகத்தையும் தருகின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. 

பொதுவாக பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பது பழமொழி ஆகும். ஏனென்றால், பாம்பின் நஞ்சையும், அதன் ஆக்ரோசத்தையும் கண்டு அஞ்சாத ஆட்களே இருக்க மாட்டார்கள். ஏனெனில் அவை தனது வாழ்விடத்தை வந்து பார்த்துவிட்டு செல்கிறது. அத்தகைய உயிரினங்களை ஆறறிவு கொண்ட மனிதர்கள் செய்யும் பல்வேறு காரியங்கள் ஆச்சர்யத்தை கொடுக்கிறது. சில நேரங்களில் இதெல்லாம் தேவையா என்ற அளவுக்கும் இருக்கிறது. அத்தகைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | நாயிடம் கேவலமாக பல்பு வாங்கிய பெரிய சைஸ் முதலை: வீடியோ வைரல்

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், நாகப்பாம்பு எப்படி கதவுக்கு பின்னால் ஒளிந்து கொண்டு உடனடியாக வெளியே வருகிறது என்பதை நீங்கள் காணலாம். வீட்டின் கதவின் இடுக்கில் இருந்து வெளியே வந்த பாம்பு தன்னை படம் எடுப்பதை பார்த்து, பதிலுக்கு படம் எடுத்து மிரட்டி அவரை தாக்க முயன்று உள்ளது. பொதுவாக நாகப்பாம்பு தங்களை தாக்கும் போது தற்காப்புக்காக கழுத்தை விரித்து தலையை தூக்கி படமெடுத்து ஆடும். அப்படிதான் இந்த பாம்பும் செய்கிறது.

நாகப்பாம்பின் வீடியோவை இங்கே பாருங்கள்

வைரலாகி வரும் இந்த வீடியோ @TheFigen_ என்கிற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். மேலும் இதனை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ‘ஆள விடுடா சாமி’: விட்டால் போதும் என ஓடியே போன பாம்பு, வியக்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News