கோவையில் கல்லூரி ஊழியர்களின் வெறித்தனமான தாக்குதல் வீடியோ வைரல்

Viral Video of Dog: கல்லூரி வளாகத்தில் புகுந்த தெரு நாய் ஒன்றை, கல்லூரி ஊழியர்கள் கற்கள் மற்றும் கட்டையால் அடித்து கொலை செய்யும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி வைரலாகின்றன...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 2, 2022, 06:09 PM IST
  • கல்லால் நாயை அடித்துக் கொன்ற ஊழியர்கள்
  • கல்லூரிக்குள் நுழைந்த நாய்க்கு நேர்ந்த சோகம்
  • நாயின் இறுதி நிமிட வீடியோ வைரல்
கோவையில் கல்லூரி ஊழியர்களின் வெறித்தனமான தாக்குதல் வீடியோ வைரல் title=

கோவை: கல்லூரி வளாகத்தில் புகுந்த தெரு நாய் ஒன்றை, கல்லூரி ஊழியர்கள் கற்கள் மற்றும் கட்டையால் அடித்து கொலை செய்யும் பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சரவணம்பட்டி துடியலூர் செல்லும் சாலையில் இயங்கி வரும் தனியார் கல்லூரி வளாகத்திற்குள் நேற்று முன்தினம் தெரு நாய் ஒன்று புகுந்துள்ளது. இதனைப் பார்த்த கல்லூரி ஊழியர்கள்  விரட்டியுள்ளனர். 

அப்போது ஊழியர்களிடமிருந்து தப்ப முயன்ற நாய் உலகத்திலிருந்து புதர் ஒன்றில் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து ஊழியர்கள் கற்கள் மற்றும் கட்டையால் நாயை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும் படிக்க | பாம்புடன் காரில் பயணம் செய்ததுண்டா? அப்படி ஒரு திகில் பயணத்தின் வீடியோ வைரல் ஆகியுள்ளது

இதில் நாய் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்த நிலையில் கயிறு மூலம் இருவர் இழுத்துச் சென்று வெளியில் எரிந்துள்ளனர். இந்த காட்சிகளை பதிவு செய்த கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள நிலையில் தற்போது இந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. 

அந்த காட்சிகளில் ஊழியர்கள் புதருக்குள் சிக்கிய தெரு நாய் கட்டையால் தாக்குவதும், வலியால் நாய் கத்துவதும் பதிவாகி இருக்கிறது. 

இது தொடர்பாக கோவையைச் சேர்ந்த விலங்குகள் நல அமைப்பின் சட்ட ஆலோசகர் ஐஸ்வர்யா என்பவர்,நாய் வீடியோ காட்சிகளுடன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன் பேரில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் இருவர் மீது வழக்கு பதிவு செய்த சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | தங்கையின் முதல் நடையால் பூரிப்படைந்த குட்டி அண்ணன்: நெட்டிசன்கள் பாராட்டும் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News