தூங்கும் போதும் குட்டியை அரவணைக்கும் தாய் கோவாலாவின் க்யூட் வீடியோ

ஆஸ்திரேலிய நாட்டின் ஒரு முக்கியமான அடையாளச் சின்னமாகக் கருதப்படும் கோவாலா ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 3, 2022, 04:09 PM IST
  • இணைய உலகம் ஆச்சர்யங்களை அள்ளித் தருவதில் நம்மை ஏமாற்றுவதே இல்லை.
  • கோவாலா என்பது ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு.
  • கோவாலாவின் பிரதான உணவும் யூக்கலிப்டஸ் இலைகளாகும்.
தூங்கும் போதும் குட்டியை அரவணைக்கும் தாய் கோவாலாவின் க்யூட் வீடியோ  title=

கோவாலா  என்பது ஆஸ்திரேலியாவில் மட்டுமே காணக்கூடிய பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது ஆஸ்திரேலிய நாட்டின் ஒரு முக்கியமான அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது. இவை ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து, வடக்கு நியூ சவுத் வேல்ஸ், விக்ரோறியா, தெற்கு ஆஸ்திரேலியா மாநிலங்களில் பெருமளவு காணப்படுகின்றன.

கோவாலா என்பது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளின் ஒரு சொல் ஆகும்.  இதன் பொருள் தண்ணீர் தேவை) இல்லை என்பதாகும். கோவாலாக்கள் தண்ணீர் குடிப்பதில்லை. தமக்குத் தேவையான நீரை தாம் வசிக்கும் யூக்கலிப்டஸ் மரங்களின் இலைகளிலிருந்தே பெறுகின்றன என்பதால், இதற்கு இந்த பெயர் வந்துள்ளது. கோவாலாவின் பிரதான உணவும் யூக்கலிப்டஸ் இலைகளாகும். 

வார இறுதியில் விடுமுறை நாளில் மதியம் ஒரு குட்டித் தூக்கம் போடுவது யாருக்குத் தான் பிடிக்காது...  ஆனல் கோலா கரடிகளை பொறுத்தவரை வார இறுதியில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அதை செய்யும். கோலாக்களுக்கு கொஞ்சம் சோம்பலாகத்தான் இருக்கும். மேலும்,  இலைகளை சாப்பிடாத நேரத்தில், அவை கிளைகளில் உறக்கநிலையில் நேரத்தை செலவிடுகின்றன. ஒரு இவற்றால், நாளைக்கு 18 மணி நேரம் வரை தூங்க முடியும். அந்த வகையில், அமா கோலா கரடியும், குட்டியும் தூங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | Viral Video: சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை இங்கே ‘iPhone’ ட்யூனை இசைக்கிறது..!!

வைரல் வீடியோவை கீழே காணலாம்:

ஒரு மரக்கிளையில் தனது கைக்குழந்தையுடன் அம்மா கோலா கரடியும் தூங்கும் க்யூட் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அழகான வீடியோக்களை தவறாமல் பகிர்ந்து கொள்ளும் 'buitengebieden' பக்கத்தால் தான் இந்த வீடியோ. ட்விட்டரில் வெளியிடப்பட்டது. இது 6.1 மில்லியன் பார்வைகளையும் 297k லைக்குகளையும் பெற்றுள்ளது.

வீடியோவில், அம்மா கோலா தனது சிறிய கோலா கரடிக் குட்டியை தனது கைகளில் கட்டி அணைத்துக் கொண்டு தூங்குவதைக் காணலாம்.  தூங்குவதற்கு முன்பு அழகாக கொட்டாவியும் விடுகிறது.  அம்மா கோலா அன்புடன் தன் குழந்தையின் மேல் தலை வைத்து தூங்கும் காட்சி இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News