Cute Viral Video: என்னை விடு... நான் வரமாட்டேன்... அடம் பிடிக்கும் வாத்து குஞ்சுகள்!

Cuteness Overloaded! மனிதக் குழந்தையைப் போலவே, விலங்குகளின் குட்டிகள், பறவைககளின் குஞ்சுகள் செய்யும் குறும்புகளும் நம்மை மிகவும் ரசிக்க வைக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 30, 2022, 05:11 PM IST
  • சமூக வலைதளத்தில் வைரலாகும் வாத்து குஞ்சு வீடியோ.
  • பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும் வீடியோ.
  • பறவைககளின் குஞ்சுகள் செய்யும் குறும்புகளும் நம்மை மிகவும் ரசிக்க வைக்கும்.
Cute Viral Video: என்னை விடு... நான் வரமாட்டேன்... அடம் பிடிக்கும் வாத்து குஞ்சுகள்!  title=

சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அதிலும் விலங்குகள் பறவைகளின் வேடிக்கை விளையாட்டுக்கள் குறும்புகளை ரசிக்க தனிப்பட்டாளமே உள்ளது எனலாம். மனிதக் குழந்தையைப் போலவே, விலங்குகளின் குட்டிகள், பறவைககளின் குஞ்சுகள் செய்யும் குறும்புகளும் நம்மை மிகவும் ரசிக்க வைக்கும். அந்த வகையில் வாத்து குஞ்சுகளின் வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. 

வைரலாகும் அந்த வீடியோவில், நீச்சல் குளம் ஒன்றில் தாய் வாத்து ஒன்று, கரையில் நடக்கும் வேளையில், வாத்து குஞ்சுகள் அதனுடன் இணைந்து தண்ணீரில் நீந்திச் செல்வதைக் காணலாம். அப்போது நீச்சல் குளத்தில் இருக்கும் யாரோ ஒருவர், அதனை மீன் பிடிக்கும் சல்லடை போன்ற ஒன்றின் மூலம் வாத்துக் குஞ்சுகளை பிடித்து தரையில் விடுகிறார். அதில் சில வாத்துக் குஞ்சுகள் பேசாமல் போனாலும், சில முரண்டு பிடிக்கின்றன. அதில் ஒரு வாத்து, மீன் வலையில் அகப்படாமல் தப்பிச் செல்கிறது. அது பயங்கரமாக போக்கு காட்டுகிறது. வைரலாகி வரும் இந்த வீடியோ பார்ப்பவர் மனதை கொள்ளை கொள்ளும். இந்த வீடியோ, Buitengebieden பெயரிலான @buitengebieden என்ற டிவிட்டர் கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: இது என்னடா சோதனை... தண்ணீர் குடிக்க போராடும் குட்டி யானை

வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:

 

 

பதிவிட்ட ஒரு நாளிலேயே, 2.2 மில்லியன் பார்வைகளை அள்ளியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் அதனை ரீட்வீட் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | Viral Video: தாய் - மகள் ஜோடியின் அற்புத நடனம்; பாராட்டித் தள்ளும் நெட்டிசன்கள்

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News