டார்ச்லைட் திரைப்படத்தின் Deleted Scene-1 வெளியாகியுள்ளது!

நடிகை சதா நடிப்பில் உறுவாகியுள்ள டார்ச்லைட் திரைப்படத்தின் 1 நிமிட Deleted Scene வெளியாகியுள்ளது!

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Sep 11, 2018, 12:29 PM IST
டார்ச்லைட் திரைப்படத்தின் Deleted Scene-1 வெளியாகியுள்ளது!
Screengrab (Youtube)

நடிகை சதா நடிப்பில் உறுவாகியுள்ள டார்ச்லைட் திரைப்படத்தின் 1 நிமிட Deleted Scene வெளியாகியுள்ளது!

தமிழ் திரையுலகில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உறுவாகி வெளியான ஜெயம் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் சதா. கோலிவுட்டில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் சதா. 

எனினும் கடந்த சில வருடங்களாக இவருக்கு சொல்லிக்கொள்ளும் வகையில் எந்த பட வாய்ப்புகளும் இல்லை, இந்நிலையி தற்போது இவர் மீண்டும் டார்ச்லைட் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற தமிழன் திரைப்படத்தினை இயக்கிய மஜீத் இப்படத்தினை இயக்கியுள்ளார். பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கையினை மையப்படுத்தி உறுவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படமானது 1990-ஆம் நிழந்து ஓர் உண்மை கதையின் தழுவல் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். இப்படத்தில் சதாவுடன், நடிகை ரித்விக்கா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றார். 

முன்னதாக இப்படத்தின் டீஸர், Sneak Peek வீடியோ வெளியாகி ரசிகர்களிடையேள நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.