தனுஷின் ஜகமே தந்திரம் படத்துக்காக ட்விட்டர் சிறப்பு எமோஜி!

தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் வருகிற ஜூன் 18 ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 3, 2021, 02:00 PM IST
  • ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் வெளியானது.
  • ஜகமே தந்திரம் படம் நேராக நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
  • முன்னதாக பிப்ரவரி 22 ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியானது.
தனுஷின் ஜகமே தந்திரம் படத்துக்காக ட்விட்டர் சிறப்பு எமோஜி! title=

Dhanush starrer Jagame Thandhiram: தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் (Karthik Subbaraj) இயக்கியுள்ள படம் ஜகமே தந்திரம். இந்த திரைப்படம் 2020, மே மாதத்தில் வெளியாகவிருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக அது தள்ளிப் போனது. 

தனுஷ் (Dhanush) ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி நடித்துள்ளார். ஜகமே தந்திரம் (Jagame Thandhiram) படம் நெட்பிளிக்ஸில் OTT  தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

ALSO READ | தனுஷின் 'ஜகமே தந்திரம்' ட்ரைலர்: ரசிகர்கள் கொண்டாட்டம்

இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்திற்காக ட்விட்டரில் சிறப்பு எமோஜி வெளியிடப்பட்டு உள்ளது. தனுஷ் படத்திற்கு எமோஜி கிடைப்பது இதுவே முதன்முறை ஆகும். ஜகமே தந்திரம் படத்திற்காக வெளியிடப்பட்டுள்ள எமோஜி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. 

முன்னதாக ஜூன் 1 ஆம் தேதி ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையெ பெரும் வரவேற்பு கிடைத்தது. அசால்டான நடிப்பில் அவருக்கே உரிய பாணியில் தனுஷ் பட்டையைக் கிளப்பியுள்ளார் என்பதை ட்ரைலரை பார்த்தே தெரிந்துகொள்ள முடிந்தது. மேலும் ஜகமே தந்திரம் படத்துக்கு ஒரு தனிச் சிறப்பு உள்ளது. இது வரை ஓ.டி.டி தளத்தில் நடக்காத வகையில், இப்படம் 17 மொழிகளில் டப் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News