தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்!
தெலுங்கானா உள்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுகிறார்.
கேரளா மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு, ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதேபோல், ராஜஸ்தான் மாநில ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டார். இமாசலப்பிரதேசம் மாநில ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன் அவர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது.,
"பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி @DrTamilisaiBJP அவர்களுக்கு வாழ்த்துகள்!
பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்திலிருந்து, தெலங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கும் அன்புச் சகோதரி @DrTamilisaiBJP அவர்களுக்கு வாழ்த்துகள்!
அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை எந்நாளும் அவர் பாதுகாப்பார் என பெரிதும் நம்புகிறேன். https://t.co/kItr919Ux2
— M.K.Stalin (@mkstalin) September 1, 2019
அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் பாடுபட்டு, இந்திய அரசியல் சட்டத்தின் மாண்புகளை எந்நாளும் அவர் பாதுகாப்பார் என பெரிதும் நம்புகிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவர் H ராஜா தெரிவிக்கையில்., "தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரி திருமதி.Dr.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்..." என குறிப்பிட்டுள்ளார்.
தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரி திருமதி.Dr.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்...@DrTamilisaiBJP #tamilisai
— H Raja (@HRajaBJP) September 1, 2019