சாலையைக் கடக்க உதவும் காகம்! அதிசயமான வைரல் வீடியோ

பாட்டி வடை சுட்ட கதையில், காக்கா வடையை தூக்கிச் சென்று விட்டது என்று காலம் காலமாக கேட்டு வந்திருப்போம். ஆனால், இன்றைய காகம், நவீன காகம், மற்றவர்களுக்கு உதவும் காக்கை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கு இலக்கணமாக கூறப்படும் காகம், அந்த பழமொழி பழையமொழியல்ல என்பதை நிரூபித்த நிதர்சனமான வைரல் வீடியோ இது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 6, 2020, 10:55 PM IST
  • ஒரு காகம் மற்றும் முள்ளெலி ஒன்றின் அன்பு ததும்பும் வீடியோ
  • காகம் இங்கு வடையை தூக்கிச் செல்லவில்லை, ஒரு உயிரினத்தின் உயிரை பாதுகாக்கிறது.
  • உணர்திறன் அதிகம் கொண்டவை என விலங்குகளை அனைவரும் பாராட்டுகின்றனர்...
சாலையைக் கடக்க உதவும் காகம்! அதிசயமான வைரல் வீடியோ title=

பாட்டி வடை சுட்ட கதையில், காக்கா வடையை தூக்கிச் சென்று விட்டது என்று காலம் காலமாக கேட்டு வந்திருப்போம். ஆனால், இன்றைய காகம், நவீன காகம், மற்றவர்களுக்கு உதவும் காக்கை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பழமொழிக்கு இலக்கணமாக கூறப்படும் காகம், அந்த பழமொழி பழையமொழியல்ல என்பதை நிரூபித்த நிதர்சனமான வைரல் வீடியோ இது.
முள்ளெலிக்கு உதவும் காகத்தின் வீடியோ இதயத்தைத் தொடுகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, இதில் காகம், ஒரு காட்டு எலி (Hedgehog) சாலையைக் கடக்க உதவுவதைக் காணலாம்.  
புதுடெல்லி: இதயம் தொடும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது ஒரு காகம் மற்றும் முள்ளெலி ஒன்றின் அன்பு ததும்பும் வீடியோ இது. வீடியோவில், சாலையைக் கடக்கும்போது ஒரு முள்ளெலி (Hedgehog) நடுவில் நின்று விடுகிறது. அந்த நேரத்தில் அங்கு ஒரு கார் முன்புறம் இருந்து வருகிறது, கார் வருவதைப் பார்த்துவிட்ட காகம், முள்ளெலி சாலையைக் கடக்க உதவுகிறது. முள்ளெலியால் நடக்க முடியவில்லை, உடனே காகம் சாலையைக் கடக்க அதற்கு உதவுகிறது.

இந்த வீடியோவைப் பார்க்கும் அனைவரும் பாராட்டுகின்றனர். இதில், காகம் அலகால், முள்ளெலியை அழகாக தள்ளி, முள்ளெலி நடக்க உதவுகிறது. விலங்குகளுக்குள் இரக்க உணர்வு இருக்கிறது என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம். அண்மைக் காலங்களாக விலங்குகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்படுகின்றன. குறிப்பாக கொரோனா வைரஸ் காலத்தில் லாக் டவுன் காலத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளிவந்து, அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.  
பாராட்டு மழையில் நனைக்கும் சமூக ஊடக பயனர்கள் 

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை நேச்சர் பவுண்டேஷன் (Nature foundation) என்ற பேஸ்புக் பக்கம் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும், பல்வேறுவிதமான கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். மனிதர்களை விட விலங்குகளுக்கு அதிக உணர்திறன் இருப்பதாக ஒரு பயனர் சொல்கிறார்.
இந்த விலங்குகளிடமிருந்து நாம் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று மற்றொரு பயனர் எழுதினார். இந்த வீடியோவிற்கு இதுபோன்ற பல அன்பால் தோய்த்து, ஆசையால் நிரப்பப்பட்ட பல்வேறு எதிர்வினைகள் வந்துள்ளன. விலங்குகளின் இதுபோன்ற பல வீடியோக்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இந்த வீடியோவை பலர் விரும்புகின்றனர், சிலர் கருத்துக்களையும் தெரிவிக்கின்றனர். இந்த காகம்-முள்ளெலி வீடியோ இன்றைய வைரல் வீடியோவாக இணையத்தில் உலா வருகிறது. 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News