அடேங்கப்பா என்ன வெயிலு.. தொட்டிக்குள் குளியல் போட்ட நாய்!

கோடை வெயிலின் தாக்கம் தாங்காமல் தண்ணீர் குடிக்க வந்த நாய் ஒன்று திடீரென்று தண்ணீருக்குள் இறங்கி குளிக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : May 24, 2022, 12:58 PM IST
  • தண்ணீர் தொட்டியில் குளிக்கும் நாய்.
  • வெயிலின் தாக்கத்தினால் ஜாலி குளியல்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
அடேங்கப்பா என்ன வெயிலு.. தொட்டிக்குள் குளியல் போட்ட நாய்! title=

கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது, ஆங்காங்கே அவ்வப்போது மழைத்துளிகள் சில மண்ணை நனைத்தாலும் வெக்கை தணிந்தபாடில்லை.  ஒவ்வொரு வருடமும் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.  இந்த காலநிலையில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள மனிதர்கள் எதாவது ஒன்றை செய்து தப்பித்து விடுவார்கள்.  ஆனால் தெருக்களில் அலையும் விலங்குகளுக்கு அவற்றை தகவமைத்து கொள்ள சரியான இடம் கிடைக்காது.  அதனால் தண்ணீரை குடிக்க சென்ற நாய் ஒன்று திடீரென்று குளியல் போட தொடங்குகிறது, இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | 'நான் பாட்டி இல்லடா, பாகுபலி': மாஸ் காட்டும் பாட்டியின் வைரல் வீடியோ 

அந்த வைரல் வீடியோவானது பைடேங்பைடன் என்கிற ட்விட்டர் கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், தரையில் சிறிய வாளியில் நீர் நிரப்பி வைக்கப்பட்டு இருக்கிறது, கோடை வெயிலின் தாக்கத்தால் வறட்சியான நாய் ஒன்று அதிலுள்ள நீரை அருந்துவதற்காக வாளியின் அருகில் செல்கிறது.  பின்னர் அந்த வாளியின் மீது ஏறி நின்று அதிலுள்ள நீரை குடிக்க ஆரம்பிக்கிறது, பின்னர் வெயிலின் சூடு தாங்காமல் அந்த நீருக்குள் இறங்கி குளிக்க ஆரம்பிக்கிறது.  அதனைத்தொடர்ந்து ஓரளவு அந்த நாய்க்கு குளிர்ச்சி கிடைத்ததும் அந்த வாளியிலிருந்து மெதுவாக கீழே இறங்கி நடந்து செல்கிறது.

 

இந்த வீடியோ இணையத்தில் பலரையும் கவரும்படியாக அமைந்துள்ளது.  வெயில் நாயை எவ்வளவு வாட்டி வதைத்து இருக்கிறது என்பது இந்த வீடியோவின் மூலம் தெரிகிறது.  இந்த வீடியோவிற்கு இருபத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளன.

மேலும் படிக்க | Viral Video: திருமணத்திற்கு முன்பே வருங்கால கணவரிடம் "இதைக்கேட்ட" மனைவி 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News