டால்பின் வீசிய மீனை அந்தரத்தில் அட்டகாசமாக கேட்ச் பிடித்த கடல்பறவை - வைரல் வீடியோ

கடல் ஒன்றின் மேல் பறந்து கொண்டிருந்த கடல் பறவை, டால்பின் வீசிய மீனை லாவகமாக பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 24, 2023, 10:35 PM IST
  • டால்பின் வீசிய மீன்
  • சூப்பராக கேட்ச் பிடித்த பறவை
  • டிவிட்டரில் வைரலான வீடியோ
டால்பின் வீசிய மீனை அந்தரத்தில் அட்டகாசமாக கேட்ச் பிடித்த கடல்பறவை - வைரல் வீடியோ title=

பசித்தவனுக்கு பழைய சோறும் பிரியாணிபோல தான் தெரியும் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி. ஏனென்றால், மீன் பிடிக்க கடல்கடந்து பறந்து கொண்டிருந்த கடல் பறவைக்கு போகிற வழியில் வந்த அதிர்ஷ்டம்போல் டால்பின் ஒன்று மீனை பிடித்து தூக்கி வீச, அந்த நேரம் பார்த்து சரியான நேரத்தில் கடல்பறவை அங்கு பறந்து கொண்டிருக்க, அந்த மீனை லாவகமாக பிடித்து பசியை போக்கிக் கொண்டது. சூப்பரான டைமிங்கில் இந்த வீடியோவும் எடுக்கப்பட்டு சமூகவலைதளங்களில் பதவிடப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோரின் வரவேற்பையும் பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க | Viral Video: சிங்க நடைங்கிறது இது தானா... மெயின் ரொட்டில் வாக்கிங் போகும் சிங்கம்... பீதியில் மக்கள்!

இப்படியான அபூர்வ சம்பவங்கள் எல்லாம் எப்போதாவது ஒருமுறை தான் நடக்கும். அதுவும் கேமராவில் சிக்குவது எல்லாம் அபூர்வத்தின் உச்சம் என்றே சொல்லலாம். ஏனென்றால், கடலுக்குள் இருக்கும் டால்பின் சிறிய மீன்களை இரையாக சாப்பிடுவது மட்டுமல்லாமல் அதனை அவ்வப்போது ஒரு விளையாட்டு போல் தூக்கி வீசிக் கொண்டிருக்கும். இதனை சரியாக மோப்பம் பிடித்த கடல்பறவைகள் டால்பின்கள் மீனை வீசும் நேரத்தில் அந்த இடத்தில் பறப்பதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன. மீன்கள் அந்தரத்தில் வரும்போது குறி தப்பாமல் சென்று அது மீண்டும் நீருக்குள் விழுவதற்குள் பிடித்து உணவாக்கிக் கொள்கின்றன. இப்படியும் ஒரு சம்பவம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதே இந்த வீடியோவை பார்த்த பிறகு தான் பல பேருக்கு தெரிய வந்திருக்கிறது. 

கடல் பறவைகளுக்கு டால்பின்கள் போடும் மீன்கள் மிகவும் ருசியானவை என்பதால், தேடி அலைந்தாலும் அப்படியான இரை கிடைக்காது என்பதை அறிந்து கடல் பரப்பின் மீது வட்டமடித்துக் கொண்டே இருக்கும். அதற்கான வாழ்வியலும் அதுதான் என்பதால் கடல்பறவைக்கு தெரியும், எப்போது மீன்கள் மேலே வரும் என்று. அதற்காக அவை காத்துக் கொண்டே இருக்கும். வரும்போது உணவாக்கிக் கொள்ளும். Never tell me the odds என்ற பக்கத்தில் தான் இப்போது இந்த வீடியோ பதிவிடப்பட்டு வைரலாகியுள்ளது. இதுவரை 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.  

மேலும் படிக்க | செல்ல நாய்க்காக ராட்சத கரடியுடன் மோதிய நபர்: புகழ்ந்துதள்ளும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News