பிரபல ஆன்லைன் பணப்பரிவர்த்தனை நிறுவனமான PhonePe, Flipkart-லிருந்து பிரிந்து தனி நிறுவனமாக செயல்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு Flipkart ஒப்புதல் அளித்துள்ளது!
பிரபல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான Flipkart, ஆன்லைன் பணப் பரிவர்த்தனைக்காக இந்தியாவில், 'PhonePe' எனும் ஆன்லைன் வாலட் வசதியை அறிமுகம் செய்தது.
PhonePe தற்போது, இந்தியாவில் இது அதிக மக்கள் உபயோகிக்கும் ஒரு செயலியாக உருவெடுத்து வருகிறது. இந்த PhonePe வாலட்டுகளில் பல்வேறு பணம் திரும்ப்பெறும் சலுகைகள் வழங்கப்பட்டு வருவதால் மக்கள் தொடர்ச்சியாக உபயோகித்து வருகின்றனர்.
இந்நிலையில், Flipkart-ன் ஒரு துணை நிறுவனமாக செயல்பட்டு வந்த PhonePe, தனி நிறுவனமாக செயல்பட Flipkart போர்டு இன்று அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து புதிய நிதிகளை திரட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், விரைவில் 'PhonePe' தனி நிறுவனமாக செயல்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான பணிகள் விரைவில் தொடக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'PhonePe' செயலி, கடந்த 2016-ஆம் ஆண்டு Flipkart-ன் வசம் சென்றது குறிப்பிடத்தக்கது.