விலங்குகள், குறிப்பாக வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் தினம் தினம் மனிதர்களை பரவசத்துக்கு ஆளாக்குபவை. எப்போதும் நமக்கு ஆச்சர்யங்களையும், ஆனந்த அதிர்ச்சிகளையும் அள்ளிக் கொடுக்க வல்லன. அதிலும் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் நமது வீட்டின் ஒரு அங்கத்தினர் போல் ஆகி விடுகிறது என்றால் மிகையில்லை. அதில் நாய்களும் பூனைகளும் முதலிடம் வகிக்கின்றன. வீட்டில் வளர்க்கும் போது அவை வீட்டில் ஒருவராகவே வளரும். செல்ல பிராணிகள் செய்யும் குறும்புகள், செயல்கள் எல்லாமே ரசிக்கும்படி இருப்பவை.
தற்போது வைரலாகி வரும் பூனை வீடியோவில், அழகான பூனை குட்டி ஒன்று தாய் பூனையிடன் வசமாக வாங்கிக் கட்டிக் கொள்வதைக் காணலாம். சில நேரங்களில் விலங்குகளின் நடத்தை மனிதர்களைப் போலவே இருப்பதை நாம் புரிந்து கொள்ளலாம். குறிப்பாக தாய்மார்கள். குழந்தைகளை காப்பாற்றுவது அல்லது அவர்களைத் தண்டிப்பது ஆகட்டும், விலங்குகள் ஆனாலும், மனிதர்கள் ஆனாலும் அவர்களின் தன்மை மாறுவதே இல்லை. தாய்மார்கள் ஈடு இணையில்லாத அன்பு மற்றும் அக்கறையின் உருவகம். ஆனால், தேவைப்படும்போது தங்கள் அன்பையும் கோபத்தையும் காட்டுகிறார்கள். எல்லா விதமான மன அழுத்தங்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு வாழ்க்கையை சிறிது நேரம் ரசிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ வரப்பிரசாதம். வைராகும் வீடியோவை கீழே கண்டு ரசியுங்கள்.
வைரலாகும் பூனை குட்டி வீடியோ:
The feeling of mother is the same in all living things.
The mom cat scolds her baby who has run away from home! pic.twitter.com/7WjifKgpgU— Figen (@TheFigen_) June 17, 2023
வீடியோவில் முதலில் பூனைக்குட்டி ஒன்று எங்கிருந்தோ வருவதை பார்க்கலாம். அப்போது பூனைக் குட்டியை நோக்கி தாய் பூனை நடந்து செல்வதை நீங்கள் பார்க்கிறீர்கள். பூனை குட்டியும் தாய்க்கு பயந்து பதுங்கி பதுங்கி தான் வருகிறது. தாய் பூனையின் நடையிலேயே அதன் கோபம் தெரிகிறது. அலைந்து திரிந்து வந்த பூனை குட்டியை அது முதலில் ஒரு அடி கொடுத்து அதட்டுகிறது. பின்னர் கழுத்தில் கவ்விக் கொண்டு சுமந்து செல்வதை வீடியோவில் காணலாம். வீடியோவைப் பார்க்கும் போது, தாய்க்கு நிகர் தாய் மட்டுமே என்பது புரியும். இந்த வைரல் வீடியோ @TheFigen_ என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப் பட்டுள்ளது. இந்த வீடியோ சுமார் 1.8 மில்லியன் பார்வைகளையும் 18 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது. அந்த வீடியோ நிஜமாகவே வைரலாகி வருகிறது.
பூனைகளும் மிகவும் புத்திசாலியான உயிரினங்கள். பூனைகள் உண்மையில் மனிதர்களுடன் பேசுகின்றன என்கின்றனர் விலங்குகளின் நடத்தை குறித்த நிபுணர்கள். அவை தனக்கு தெரிந்த வழியில் பேசுகின்றன, உணர்ச்சிகளை பகிர்ந்து கொள்கின்றன என்றும் கூறுகின்றனர். அந்த வகையில் பூனை குட்டி ஒன்று தனது தாய் பூனையிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்ளும் வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும், இது மிகவும் ரசிக்கும் படியும் இருக்கிறது என்றால் மிகையில்லை. இதனை மீண்டும் மீண்டும் பார்க்கவும் தோன்றுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
மேலும் படிக்க | இறந்த தாயை எழுப்பும் குட்டி குரங்கு: இணையத்தை அழவைத்த இழப்பு.... வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ