மீண்டும் மீண்டும் சீண்டிய பெண்: கடுப்பாகி குரங்கு செய்த செயல், வைரல் வீடியோ

Funny Monkey Video: ‘பெண்ணே இது தேவையா?’ என அனைவரையும் கேட்க வைக்கும் அளவுக்கு ஒரு வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இது பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 2, 2022, 03:35 PM IST
  • அமைதியாய் அமர்ந்திருந்த குரங்கு.
  • சீண்டிப்பார்த்த பெண்.
  • வெச்சி செஞ்ச குரங்கு.
மீண்டும் மீண்டும் சீண்டிய பெண்: கடுப்பாகி குரங்கு செய்த செயல், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

குரங்குகள் இந்த கிரகத்தின் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாகும். குரங்கிலிருந்து மனிதர்களாகிய நாம் வந்தோம். குரங்குகள் பல சமயம் மனிதர்களைப் போலவே செயல்படுவதை பார்த்துள்ளோம். ஒரு குரங்கு மற்றும் பெண்ணின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவில் ஒரு பெண் குரங்கு ஒன்றை சீண்டுவதையும், அதற்கு குரங்கு சரியான பதிலடி கொடுப்பதையும் காண முடிகின்றது. இந்த வேடிக்கையான வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்க்கப்பட்டு ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். இது பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும், இதில் மனிதர்களாகிய நாம் கற்றுக்கொள்ள பல பாடங்கள் உள்ளன.

குரங்கை சீண்டிப்பார்த்த பெண் 

ஒரு குரங்கு அமைதியாக மரத்தில் அமர்ந்திருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. ஆனால், அதைத் துன்புறுத்தும் நோக்கில் ஒரு பெண் பின் பக்கமாக அந்த குரங்கை அணுகுகிறார். அவர் குரங்கை பலமுறை சீண்டி விட்டு ஓடி வருகிறார். ஆனால், அமைதியாக இருப்பது போல தோன்றிய குரங்கு, உண்மையில் அவரை பழிவாங்க திட்டம் தீட்டிக்கொண்டு இருக்கிறது. பெண் சீண்டுவது தனக்கு தெரியாதது போல அது நடிக்கிறது.

மேலும் படிக்க | அம்மானா சும்மாவா? சீண்டிய சிங்கத்தை விரட்டி அடித்த எருமையின் வைரல் விடியோ 

ஆனால், அந்த பெண் மீண்டும் அதன் அருகே சென்ற உடனேயே, அது உடனடியாக பெண்ணின் முடியைப் பிடித்துக் கொள்கிறது. குரங்கின் பிடியின் காரணமாக அந்த பெண்ணால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வீடியோவில் நாம் காணும் காட்சி மிகவும் வேடிக்கையாக உள்ளது. 

குரங்கை சீண்டிய பெண்ணின் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meemlogy (@meemlogy)

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பல்வேறு தளங்களில் பரவி வருகிறது. இது இன்ஸ்டாகிராமில் meemlogy என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ எப்போது, ​​எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 

‘குரங்கு செய்தது சரிதான்’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ’இந்த சம்பவம் வேடிக்கையாக இருப்பதோடு, திகிலூட்டும் வகையிலும் உள்ளது’ என ஒருவர் யதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். விலங்குகளை நாம் தொந்தரவு செய்யக்கூடாது, செய்தால் அதற்கான விளைவை எதிர்கொள்ள நேரிடும் என்ற பாடம் இதில் உள்ளது. 

மேலும் படிக்க | திகிலூட்டும் வைரல் வீடியோ: மனித தலையை கவ்வியபடி ஓடும் நாய்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News