மூன்று கீரிகளுக்கு இடையில் சிக்கிய நாகப்பாம்பு: திக் திக் வைரல் வீடியோ

இதில், நாகப்பாம்பை கீரி எப்படி எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டது என்பதை நீங்கள் பார்க்கலாம். இதன் பின் நடந்தது தற்போது வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Nov 2, 2022, 09:22 AM IST
  • நாகப்பாம்பு மூன்று கீரிகளுக்கு இடையில் மோசமாக சிக்கிக்கொண்டது
  • சமூக ஊடகத்தில் வைரலாகும் வீடியோ.
  • கீரியை நேருக்கு மோதும் கருநாகமும் உக்கிரத்துடன் சண்டையிடுகிறது.
மூன்று கீரிகளுக்கு இடையில் சிக்கிய நாகப்பாம்பு: திக் திக் வைரல் வீடியோ title=

கீரி நாகப்பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

விலங்குகளில், சிங்கம், குரங்கு, நாய், பூனை, சிங்கம், பாம்பு, புலி என இந்த மிருகங்களுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. இவற்றின் வீடியோக்களை மக்கள் மிகவும் விரும்பி பார்க்கிறார்கள். சமீப காலங்களில் கீரி மற்றும் நாகப்பாம்பின் வீடியோ பல வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. தற்போதும் ஒரு திகிலான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் நாகப்பாம்பு காட்டில் இருந்து வெளியே வந்து சாலையில் வருவதை காணலாம். பிறகு அந்த பாம்பு அந்த 3 கீரியின் முன் தோன்றியது.

மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

பாம்பு வேட்டையாடிய கீரி

வைரலாகி வரும் இந்த வீடியோவில், சாலையில் பாம்பும் கீரியும் நேருக்கு நேர் நிற்பதைக் காணலாம். பின்னர் அந்த நாகப்பாம்பை எல்லாப் பக்கங்களிலிருந்தும் கீரிகள் சூழ்வதை நாம் காணலாம். பின்னர் அந்த கீரி பாம்பை வேட்டையாடுகிறது.

வீடியோவை இங்கே பார்க்கவும்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

பாம்பு மற்றும் கீரி தொடர்பான பல காணொளிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் இந்த வீடியோவில் காணப்படும் காட்சி பொதுவாகக் காணப்படுவதில்லை. அந்த வீடியோ @beautiful_new_pixandwild_animal_pix என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க | ‘ஓடிருடா கைப்புள்ள’: பாகற்காயை ருசி பார்த்த குரங்கு, வைரலாகும் மாஸ் ரியாக்‌ஷன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News