19 அடி நீள மலைப்பாம்புடன் அசால்ட்டு செய்த நபர்: வைரல் வீடியோ

Video Viral: சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோவை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோவை இதுவரை 56 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 19, 2023, 12:35 PM IST
  • வீடியோவை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
  • 19 அடி மலைப்பாம்பை அசால்டாக பிடித்த நபர்.
  • இன்றைய வைரல் வீடியோ.
19 அடி நீள மலைப்பாம்புடன் அசால்ட்டு செய்த நபர்: வைரல் வீடியோ title=

இன்றைய பாம்பின் வைரல் வீடியோ: தற்போது பரபரப்பாக இயங்கி வரும் உலகத்தில், நம் சமூக ஊடகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகமாக த்தையே இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்தளத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.

பொதுவாக பாம்புகள் இணையத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிகமுக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒன்றாக இருந்தாலும், மக்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளது. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இதனாலே பாம்புகள் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வமாக காட்டுகிறோம். இந்நிலையில் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிறப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு வீடியோ வெகுவாக வைரலாகி வருகின்றது.

மேலும் படிக்க | வாரி அணைத்து முத்தம் கொடுத்த சிங்கங்கள், பாச மழையில் நனைந்த நபர்: நம்பவே முடியாத வைரல் வீடியோ

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், 21 வயது நபர் 19 அடி மலைப்பாம்பை பிடித்துள்ளதை காணமுடிகிறது. சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ள இந்த வீடியோவை கண்டால் கட்டாயம் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.

19 அடி மலைப்பாம்பை அசால்டாக பிடித்த நபர்
ஊடக அறிக்கைகளின்படி, வைரலாகும் வீடியோ புளோரிடாவில் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜேக் வலேரி என்ற நபர் 19 அடி நீளமுள்ள மலைப்பாம்பை கையில் பிடித்துள்ளார். மலைப்பாம்பைப் பிடிக்க முதலில் சிறுவன் முன்னோக்கிச் செல்வதும், சிறிது நேரத்தில் அதை வேகமாகப் பிடிப்பதும் வீடியோவில் தெரிகிறது. அடுத்த நொடியே மலைப்பாம்பு அவரை சூழந்துக் கொள்கிறது. அதைத்தொடர்ந்து அங்குள்ள மக்கள் சிறுவனுக்கு உதவனர்.

19 அடி மலைப்பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்:

வீடியோவை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்
சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோவை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 56 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், 3 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த மக்கள் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.) 

மேலும் படிக்க | பாம்பு vs கீரி.. இப்படியொரு ஃபைட் அ எங்கையும் பார்த்திருக்க மாட்டீங்க: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News