10 அடி நீள பாம்பின் மேல் எலியும் மற்றும் தவளையும்..வீடியோ வைரல்

தண்ணீர் குளத்தில் 10 அடி நீள பாம்பின் மீது இரண்டு எலிகள் மற்றும் தவளை ஓய்யாரமாக அமர்ந்து இருப்பதை நீங்கள் காணலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 2, 2023, 09:52 AM IST
  • இரண்டு எலி மற்றும் தவளையின் வீடியோ.
  • சமூக ஊடகங்களிலும் இதைப் பற்றிய பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன.
  • பாம்பின் மேல் சவாரி செய்யும் வீடியோ.
10 அடி நீள பாம்பின் மேல் எலியும் மற்றும் தவளையும்..வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

சமீப காலமாக பாம்பிகளின் பலவிதமான வீடியோக்களை நாம் பார்த்து வருகிறோம். சமூக ஊடகங்களில் இதைப் பற்றிய பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அந்தவகையில் இந்த முறை மிகவும் வித்தியாசமான வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதன்படி தற்போது பாம்பு, எலி மற்றும் தவளை தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, அதில் 10 அடி நீள பாம்பின் மீது இரண்டு எலிகள் மற்றும் தவளை சவாரி செய்வதை நாம் காணலாம். கற்பனை கூட செய்ய முடியாத ஒரு காட்சி போல் இது தெரிகிறது.

மேலும் படிக்க | அடர்ந்த காட்டில் ஒளிந்திருக்கும் தவளை; 10 நொடியில் கண்டுபிடித்தால் கில்லாடி தான்!

நாகப்பாம்பின் மீது சவாரி செய்யும் எலி மற்றும் தவளை
இந்த வைரலான வீடியோவில், தேங்கி இருக்கும் தண்ணீரில் பாம்பு இருப்பதை காணலாம். இந்த காட்சி ஆஸ்திரேலியாவில் வெள்ளம் வந்த போது எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த கொடூர பாம்பின் மேதகு இரண்டு எலிகள் மற்றும் ஒரு தவளை ஓய்யாரமாக அமர்ந்து இருப்பதை நம்மால் காண முடியும். அந்த பாம்பும் ஒன்றும் செய்யாமல் அமைதியாக தண்ணீரில் இருக்கிறது. 

வீடியோவை இங்கே பாருங்கள்

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை @learndoctor என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.  இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

 மேலும் படிக்க | Viral Video: கீரியின் கொடூரமான தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமான நாகப்பாம்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News