ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால் ஆரஞ்சு சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது என்பதை நாம் அனைவருமே அறிவோம். ஒரு ஆரஞ்சில் சுமார் 60 கலோரிகள் மட்டுமே உள்ளன, கொழுப்பு இல்லை, வைட்டமின் சி அதிகம் நிறைந்தது.
இருப்பினும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு, அது உங்கள் ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். இதேபோன்ற வினோதமான ஒரு சம்பவம் சீனாவிலும் நடந்துள்ளது.
தென்மேற்கு சீனாவின் (China) யுன்னான் மாகாணத்தில் உள்ள குன்மிங்கில் உள்ள ஒரு விமான நிலையத்தில் நான்கு ஆண்கள் கூடுதல் சாமான்களுக்கு அதாவது எக்ஸ்ட்ரா பேக்கேஜ் கட்டணம் செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக 30 கிலோ ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டனர். நான்கு பயணிகளும் சுமார் 30 கிலோகிராம் எடையுள்ள ஆரஞ்சுப் பெட்டியை வைத்திருந்தனர்.
விமான நிலையத்தில் அவர்கள் 300 யுவான், அதாவது 3,384 ரூபாயை லகேஜ்ஜிற்காக கூடுதல் தொகை செலுத்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் இவர்கள் அந்தத் தொகையை செலுத்தத் தயாராக இல்லை, அதனால் அவர்கள் எல்லா ஆரஞ்சுகளையும் சாப்பிட்டு முடித்தார்கள்.
"நாங்கள் அங்கேயே நின்று எல்லா ஆரஞ்சையும் சாப்பிட்டோம். அதற்கு சுமார் 20-30 நிமிடங்கள் எடுத்தது" என்று அதில் ஒரு நபரான வாங் என்பவர் குளோபல் டைம்ஸிடம் கூறினார்.
இருப்பினும், இதை சாப்பிட்டதில் அவர்களுக்கு வாயில் புண் ஏற்பட்டுள்ளது. மேலும் வயிற்று பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் பேசாமல் எக்ஸ்ட்ரா லக்கேஜுக்க்கே கட்டணம் கட்டியிருக்கலாம். இப்போது வைத்திய செலவு அதிகமானது தான் மிச்சம்.
இந்த சம்பவம் சீன சமூக ஊடக தளங்களில் வைரலாகியுள்ளது. காமெடியான இந்த நிகழ்வு குறித்து, பலர் தங்கள் ட்கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
ALSO READ | ஆன்லைன் ஷாப்பிங் பரிதாபங்கள்... வர்கி என வரட்டியை சாப்பிட்ட பரிதாபம்...!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR