வாடிக்கையாளர் ஒருவர் வறட்டியை, சாப்பிடும் பொருள் என நினைத்து வாங்கி அதை சாப்பிட்டு, அது எப்படி இருந்தது எனவும் பதிவிட்டுள்ளார்.
வாடிக்கையாளருக்கு உணவு பொருள் எது, எது இல்லை என வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லையா என பலர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்
பல நெட்டிசன்கள் தயாரிப்பு பற்றி கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் படித்து புரிந்து கொள்ளாமல் வாங்கியுள்ளார் என பதிவு செய்துள்ளனர். ஆன்லைனில் ஒரு பொருளை வாங்கும் போது, இதனை வாங்கிய மற்ற வாடிக்கையாளர்கள். இந்த பொருளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள, அவர்கள் பதிவிட்ட கருத்துக்களை படிக்கும் போது, வரட்டி வாங்கிய நபர் பதிவிட்ட கருத்து, மிகவும் வைரலாகி விட்டது.
ஒரு ட்விட்டர் பயனர் அமேசானில் (Amazon) மாட்டு சாணம் வரட்டியை பற்றி அதை வாங்கியவர் பதிவு செய்துள்ள அபத்தமான கருத்தின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்து கொண்டுள்ளார். இந்த நபர் ஆன்லைனில் வாங்கிய மாட்டு சாணம் வரட்டியை சாப்பிட்டதாகவும் அதன் சுவை மிகவும் மோசமாக இருந்தது என்றும் பதிவிட்டுள்ளார்.
அவர், "நான் அதை சாப்பிட்டபோது, அது மிகவும் மட்டமான சுவையில் இருந்தது. இது புல் சாப்பிடுவது போல் இருந்தது, சேறும் சகதியுமாக இருந்தது. அதன் பிறகு எனக்கு உடல் நல குறைவை ஏற்படுத்தியது. தயவுசெய்து உற்பத்தி செய்யும் போது இன்னும் கொஞ்சம் சுகாதாரமாக தயாரிக்கவும். ," என அமேசானில் வாடிக்கையாளர் கருத்தாக பதிவிட்டுள்ளார்.
அமேசானில் ஆன்லைன் விற்பனைக்கான வலைத்தளத்தில், மாட்டு சாணம் பற்றிய விளக்கத்தில், பூஜை, சிரார்த்தம் , ஹோமம் போன்ற மத ரீதியிலான பயன்பாட்டிற்காக என தெளிவாக எழுதப்பட்டுள்ளது.
"தினசரி ஹோமம், பூஜை மற்றும் பிற மத காரியங்களுக்கு 100% தூய்மையான மற்றும் அசல் மாட்டு சாணம் வரட்டிகள். இந்திய பசுவின் சாணத்தால் உரிய செயல்முறையுடன் தயாரிக்கப்படுகின்றன. முற்றிலும் கையால் செய்யப்பட்டவை. முற்றிலும் உலர்ந்த, ஈரப்பதம் இல்லாத வகையில் நன்றாக எரியும். வளிமண்டலத்தை சுத்திகரிக்க பயன்படுகிறது மற்றும் பூச்சிகளை விரட்டுகிறது. 5 அங்குல விட்டம் கொண்ட வட்ட வடிவலான வரட்டி, கையாள எளிதானது மற்றும் நீண்ட நாள் தேவைக்கு எளிதாக சேமித்து வைக்கலாம்"என்று தயாரிப்பு பற்றிய விளக்கம் கூறுகிறது.
வாடிக்கையாளர் தான் பாவம், வர்கி என்று நினைத்து விட்டாரோ பார்க்க முடியவில்லை என்று தெரிகிறது.
அவர் எழுதிய ரிவியூவின் ஸ்கிரீன் ஷாட்களுடன் சமூக ஊடக பயனர்கள் ட்விட்டரில் பதிவுட்டுள்ளனர், . இந்தியாவில் எதுவும் சாத்தியம் என்று சிலர் வேடிக்கையாக பதிவிட்டுள்ளனர்.
Ye mera India, I love my India…. :) pic.twitter.com/dEDeo2fx99
— Dr. Sanjay Arora PhD (@chiefsanjay) January 20, 2021
ALSO READ | காற்றில் பறக்கும் Flying Snakes: காரணத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR