இந்திய ஆல்ரவுண்டர் கிருணால் பாண்ட்யா தனது 30 வது பிறந்தநாளில் இதைவிட ஒரு சிறந்த பரிசிற்காக ஆசைப்பட்டிருக்க முடியாது. ஒரு நாள் முன்னர்தான் அவர் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் ஆட்டத்தை ஆடினார். செவ்வாய்க்கிழமை (மார்ச் 23) புனேவில் உள்ள எம்.சி.ஏ மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியில் கிருணால் பாண்ட்யாவுக்கு ஒரு முக்கிய பங்கு இருந்தது. தனது முதல் ஒரு நாள் சர்வதேச போட்டியில் மிக வேகமான அரைசதத்தை அடித்து சாதனை படைத்தார் அவர்.
அவரது சூறாவளி ஆட்டத்திற்குப் பிறகு, கிருணாலால் (Krunal Pandya) தன்னுடைய கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இன்னிங்க்ஸ் இடைவேளையின் போது தனது சாதனையை மறைந்த தனது தந்தைக்கு அர்ப்பணித்தார். உணர்ச்சிகளால் உந்தப்பட்ட ஒரு சிறு நிகழ்வில், கிருணால் பாண்ட்யா, தனது ஓடிஐ கேப்பை தனது சகோதரர் ஹார்திக் பாண்ட்யாவிடமிருந்து பெற்றார்.
மும்பை இந்தியன்ஸ் ஆல்ரவுண்டர் 31 பந்துகளில் 59 ரன்களை எடுத்தார். வெறும் 26 பந்துகளில் அவர் தனது அரைசதத்தை அடித்தார். கே.எல். ராகுலுடன் சேர்ந்து வெறும் 57 பந்துகளில் 112 ரன்களை எடுத்தார். 317 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை இந்தியா அடைய இந்த ஜோடி பெரும் பங்களிப்பை அளித்தது.
ALSO READ: Ind vs Eng: முதல் ODI போட்டியை 66 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்தியா
இந்தியாவின் (Team India) வெற்றிக்குப் பின்னர் சமூக ஊடகங்களில் தனது உணர்வுகளை வெளிப்படுத்திய ஹார்திக் பாண்ட்யா (Hardik Pandya), தனது சகோதரருக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான செய்தியை எழுதினார்.
” நம் தந்தை மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். அவர் உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார். அவர்தான் உங்களுக்காக முன்னரே இந்த பிறந்தநாள் பரிசை அனுப்பினார். உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும். உங்களுக்காக மகிழ்ச்சியடைகிறேன். இது உங்களுக்காக...அப்பா!!” என்று ஹார்திக் தனது பதிவில் எழுதினார்.
கிருணால் பாண்ட்யாவும் தனது மறைந்த தந்தைக்காக ஒரு இதயப்பூர்வமான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்தார். தனது வெற்றியை அவர் தனது தந்தைக்கு அர்ப்பணித்தார்.
“அப்பா, நான் ஆடிய ஒவ்வொரு பந்திலும் நீங்கள் என் மனதிலும் என் இதயத்திலும் இருந்தீர்கள். என்னுடன் நீங்கள் இருப்பதை நான் உணர்ந்ததால், கண்களில் கண்ணீர் நிரம்பியது. எனது மிகப்பெரிய பலமாகவும் ஆதரவாகவும் இருந்ததற்கு நன்றி. நான் உங்களை பெருமைப்படுத்தினேன் என்று நம்புகிறேன். இந்த வெற்றி உங்களுக்கானது அப்பா.... நாங்கள் செய்யும் அனைத்தும் உங்களுக்குத்தான்” என்று கிருணால் எழுதினார்.
Papa, with every ball you were always on my mind and in my heart. Tears rolled down my face as I felt your presence with me. Thank you for being my strength, for being the biggest support I’ve had. I hope I made you proud. This is for you Papa, everything we do is for you Papa pic.twitter.com/djQWaytETG
— Krunal Pandya (@krunalpandya24) March 23, 2021
கிருணால் பாண்ட்யா ஒரு விக்கெட்டையும் எடுத்தார். இந்தியா இங்கிலாந்தை 42.1 ஓவரில் 251 ரன்களுக்கு ஆட்டமிழக்க வைத்தது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என முன்னிலையில் உள்ளது.
ALSO READ: Watch #VIVOIPL 2021 கலக்கல் பாடல் சமூக ஊடகங்களில் வைரல்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR