அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட கோலி; வருத்தத்தில் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி அரை நிர்வாண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது!

Updated: Sep 6, 2019, 12:48 PM IST
அரை நிர்வாண புகைப்படம் வெளியிட்ட கோலி; வருத்தத்தில் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோலி அரை நிர்வாண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் போது துவங்கி சமூக ஊடகங்களின் விவாத பொருளாக மாறியுள்ளார் விராட் கோலி. அந்த வகையில் தற்போது தான் வெளியிட்டுள்ள அரைநிர்வாண புகைப்படம் ஒன்றின் மூலம் மீண்டும் அவரது பெயர் இணையத்தில் ட்ரண்ட் ஆகி வருகின்றது.

மேல்சட்டை அணியாமல் அரைநிர்வாணமாக அமர்ந்து, கால்களை கைகளோடு கோர்த்து அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றினை அவர் நேற்று தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்துடன், "உள்ளே எட்டிப் பார்த்த பிறகு, வெளியே எதையும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை" என்று பரபரப்பு வாசகங்களை பதிவிட்டுள்ளார்.

இந்த அரைநிர்வாண புகைப்படம் ட்விட்டரில் வைரலாகி வரும் நிலையில், இந்தப் படத்திற்கு கோலி ரசிகர்கள் பலரும் பலவிதமாக விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக சிலர் விராட் கோலிக்கு இப்படியொரு நிலையா?  என கேள்வி எழுப்பியுள்ளனர்.  மேலும் சிலர் “என்ன நடந்தது? அனுஷ்கா வீட்டை விட்டு வெளியேற்றி விட்டாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதைப்போன்று மற்றொருவர், “என்ன தம்பி... யாராவது புண்படுத்திவிட்டார்களா?” என்று கேட்டுள்ளார்.

மற்றும் பலர் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா இந்தப் புகைப்படத்தை உற்றுப்பார்ப்பது போன்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இதையொட்டி, விராட் கோலியின் புகைப்படமும், பரபரப்பு வாசகமும் இணைய தளத்தில் பேசுபொருளாகி மாறியுள்ளது.