தவெக மாநாட்டில் ஏற்பாடுகள் எப்படி? 360° வீடியோ…

Video Of  TVK Vijay Vikravandi Conference Venue : நடிகரும், தமிழக வெற்றிக்கழகம் அரசியல் கட்சியின் தலைவருமான விஜய் தனது முதல் மாநாட்டை நடத்த இருக்கிறார். இந்த மாநாட்டின் 360° வீடியோவை இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Oct 26, 2024, 07:03 PM IST
  • விக்கிரவாண்டியில் நடக்கும் தவெக முதல் மாநாடு
  • ஏற்பாடுகள் எப்படி?
  • 360 வீடியோ!!
தவெக மாநாட்டில் ஏற்பாடுகள் எப்படி? 360° வீடியோ… title=

Video Of  TVK Vijay Vikravandi Conference Venue : தமிழ் திரையுலகின் டாப் நடிகராக விளங்கும் நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் அரசியல் கட்சியை தொடங்கினார். கட்சியை தொடங்கிய போதே, தான் 2026ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் நேரடியாக போட்டியட இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, தவெக கட்சியின் முதல் மாநாடு, விக்கரவாண்டி தொகுதியில் அக்டோபர் 27ஆம் தேதியான நாளை நடைபெற இருக்கிறது. இதையடுத்து, மாநாடு நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மக்கள் அமரும் இடத்திற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருக்கின்றன.

தவெக முதல் மாநாடு:

நடிகர் விஜய் அரசியல் கட்சியை ஆரம்பித்தில் இருந்தே, பலர் அவரது அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தின் பெரிய அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட கட்சிகள் விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. 

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு, விக்கரவாண்டி தொகுதியில் உள்ள வி.சாலையில் நடைபெற இருக்கிறது. இதில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், விஜய் நடப்பதற்காக மேடையை ஒட்டி பெரிய ராம்ப் போடப்பட்டிருக்கிறது. அத்துடன் சேர்த்து, வந்து செல்பவர்களுக்கு தேவையான கழிப்பறை வசதி, பார்க்கிங் வசதி, உணவு, தண்ணீர் உள்ளிட்ட வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கின்றன.

மாநாட்டில் அனைவரும் ஒழுக்கத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்று கண்டீஷன் போட்ட நடிகர் விஜய், தனது கட்சியினருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். பல லட்சம் மக்கள் கூடும் இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யும் வண்ணம் பல நூறு போலீஸார்களும் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.

360° வீடியோ

மாநாட்டு திடலில், மக்கள் அமரும் இடம் முதல், விஜய் நடந்து வர இருக்கும் ராம்ப் மேடை வரை அனைத்தும் அடங்கிய ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், ஆங்காங்கே பொறுத்தப்பட்டிருக்கும் மெகா லைட்கள், மேடை, கட் அவுட்கள் ஆகியவை காண்பிக்கப்பட்டிருக்கிறது. 

இப்போது பார்ப்பதற்கு யாரும் அற்று தாேன்றும் இந்த இடத்தில், நாளை மக்கள் ஜேஜேவென கூட இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அஜித் செய்த செயல்..என்ன தெரியுமா?

களைக்கட்டும் தவெக மாநாட்டு அரங்கம்!! இந்த விஷயங்களை கவனிச்சீங்களா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News