Viral Video: துப்பாக்கியினால் சுட்டவரை பதம் பார்த்த பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!

பாம்பின் பெயரை கேட்டால் படையே நடுங்கும் என்றாலும் பாம்புகள் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் எளிதில் வைரலாகின்றன. அத்தகைய வீடியோக்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர் எனலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 28, 2022, 07:35 PM IST
  • நாகப்பாம்பு ஒன்று தன்னை துப்பாக்கியினால் சுட முயன்றவரை தாக்கிய வீடியோ.
  • வைரலாகும் பாம்பு வீடியோ.
  • நாகப்பாம்பு ஒன்று சாலையில் படம் எடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.
Viral Video: துப்பாக்கியினால் சுட்டவரை பதம் பார்த்த பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ! title=

இணையதளத்தில் எண்ணிலடங்கா வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றப்படுகின்றன. சமூக ஊடகங்களில் பகிரப்படும் அனேகமான வீடியோக்களில் ஒரு சில வீடியோக்களே வைரலாகின்றன. காட்டு விலங்குகள் வீடியோக்கள், விலங்குகள் சண்டையிடும் வீடியோக்கள் ஆகியவை மிகவும் விரும்பி பார்க்கப்படும் வீடியோக்களாக உள்ளன. அதிலும் மலைப்பாம்பு, நாகப்பாம்பு போன்ற மிக மிக ஆபத்தான பாம்புகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். பாம்பின் பெயரை கேட்டால் படையே நடுங்கும் என்றாலும் பாம்புகள் தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் எளிதில் வைரலாகின்றன. அத்தகைய வீடியோக்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர் எனலாம். தற்போது நாகப்பாம்பு ஒன்று தன்னை துப்பாக்கியினால் சுட முயன்றவரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வீடியோவின் தொடக்கத்தில், நாகப்பாம்பு ஒன்று சாலையில் படம் எடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். அபோது ஒருவர் அதனை துப்பாக்கியினால் தாக்க முயற்சிப்பதையும் காணலாம். துப்பாக்கி குண்டு ஆனால் குறி தபபுகிறது. பாம்பின் மீது படாமல தரையில் படுகிறது. அதன் சத்தத்தை நாம் வீடியோவில் கேட்கலாம். அந்நிலையில், ஆத்திரமடைந்த நாகம் திருப்பி தாக்குகிறது. 

மேலும் படிக்க | 'மண்ணுல விளையாடாதனா கேட்டயா’: ஷாம்பூ போட்டு பாம்பை குளிப்பாட்டும் நபர், வைரல் வீடியோ

வைரலாகும் பாம்பு வீடியோவை கீழே காணலாம்: 

இந்த வீடியோ Instant Karma என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. டிசம்பர் 16ம் தேதி பகிரப்பட்ட இந்த வீடியோவை சுமார் 4 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பலர் கருத்தும் எழுதியுள்ளனர். நாகப் பாம்புகள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் வெப்பமண்டல பிரதேசங்களில் வாழ்கின்றன. தென்னாப்பிரிக்காவிலிருந்து தென்கிழக்கு ஆசிய தீவுகள் வரை நாகப்பாம்புகள் பரவலாக காணப்படுகின்றன. பழுப்பு, மஞ்சள் மற்றும் கருப்பு கலந்த பழுப்பு நிறங்களில் இந்த பாம்புகள் காணப்படும். சுமார் 6 அடி முதல் 7 அடி நீளம் வரை வளரும் தன்மையுடையது. தனக்கு ஆபத்து நேரும் தருணத்தில் எதிரிகளை எச்சரிக்கும் விதமாக படம் எடுத்து சீறும். சில சமயங்களில் தன்னை காத்துக் கொள்ள 

மேலும் படிக்க | கொஞ்சம் விட்டிருந்தா சோலி முடிஞ்சிருக்கும், மலைபாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News