ஒலிம்பிக் வீராங்கனை மீராபாய் சானுவின் எளிமையால் நெகிழ்ந்த நடிகர் மாதவன்!!

ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் சானுவின் எளிமையும் உறுதியும் பலருக்கு உத்வேகமாக இருந்துள்ளது. அதற்கு நடிகர் மாதவனும் விதிவிலக்கல்ல.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 30, 2021, 12:45 PM IST
ஒலிம்பிக் வீராங்கனை மீராபாய் சானுவின் எளிமையால் நெகிழ்ந்த நடிகர் மாதவன்!! title=

டோக்கியோ ஒலிம்பிக் 2020 இல் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவை நாடு முழுவதும் பாராட்டி வருகின்றது. 26 வயதான பளுதூக்கும் வீராங்கனை தனது சாதனையால் மில்லியன் கணக்கான இந்தியர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். மீராபாய் சானுவின் பயணம் பலருக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.

அவருக்கு ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றனர். மீராபாய் சானுவின் (Mirabai Chanu) எளிமையான வாழ்க்கை முறையக் கண்ட நடிகர் மாதவன், அவரது பெருமையை எடுத்துக்கூற தன்னிடம் வார்த்தைகள் இல்லை என உருக்கமாகக் கூறியுள்ளார்.

மீராபாய் சானுவின் புகைப்படத்தை பார்த்து வியந்தார் மாதவன்

இணையத்தில் வெளியாகி வரும் மீராபாய் சானுவின் புகைப்படத்திற்கு ஆர் மாதவன் (R Madhavan) சமீபத்தில் பதிலளித்தார். இந்த வார தொடக்கத்தில், ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் இந்தியாவுக்குத் திரும்பியபோது நல்ல வரவேற்பைப் பெற்றார். அவர் இம்பாலில் இருக்கும் தனது வீட்டிற்கு  சென்றவுடன் தான் உண்ட முதல் வேளை உணவின் பல காட்சிகளைப் பகிர்ந்து கொண்டார்.

ALSO READ: Tokyo Olympics 2020: இந்தியாவின் பதக்க வேட்டை துவங்கியது, வெள்ளி வென்றார் மீராபாய் சானு

மீராபாய் தனது வீட்டில் உணவு உட்கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியானது. அந்த புகைப்படத்தில் மீராபாய் சானு சமையலறை போல தோற்றமளிக்கும் இடத்தில் தரையில் அமர்ந்து சாப்பிடுவதைக் காண முடிகிறது.

"ஒலிம்பிக்கில் (Olympic Games) வெள்ளிப் பதக்கம் வென்ற பிறகு மணிப்பூரில் உள்ள தனது எளிமையான வீட்டில் மீராபாய் சானு, முறையான வசதி, வறுமை எதுவும் இந்த வலிமையான பெண் தனது கனவுகளை அடைவதைத் தடுக்கவில்லை! ஒரு உண்மையான உத்வேகம்!". என ட்வீட்டில் எழுதப்பட்டிருந்தது.

இந்த படத்தை இணையத்தில் கண்ட நடிகர் மாதவன், தன்னிடம் மீராபாயை புகழ வார்த்தையே இல்லை என நெகிழ்ந்தார். அவர் தனது பதிவில், "இது உண்மையாக இருக்க முடியாது, எனக்கு வார்த்தை வரவில்லை" என்று எழுதியிருந்தார்.

இருப்பினும், ஆன்லைனில் வெளியான புகைப்படம் பழையது, பத்மஸ்ரீ விருது பெற்ற மீராபாய் சமீபத்தில்தான் தனது வீட்டில் இருந்து சில புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: Tokyo Olympics: மீராபாய் சானுவின் வெள்ளி பதக்கம், தங்கமாக மாறுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News