சர்வைவர் போட்டியில் விபத்து; வெளியான அதிர்ச்சி வீடியோ

சர்வைவரில் இன்று அடுத்த கேப்டனை தேர்ந்தெடுக்க மிக கடினமான போட்டி நடக்கிறது.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 28, 2021, 12:28 PM IST
சர்வைவர் போட்டியில் விபத்து; வெளியான அதிர்ச்சி வீடியோ

Survivor Update: சர்வைவர் தமிழ் Zee Tamil இல் ஒளிபரப்பு ஆகி நடைபெற்று இருக்கிறது. ஆப்ரிக்காவின் தீவு ஒன்றில் நடந்து வரும் இந்த ஷோவை தொகுப்பாளராக பிரபல நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் களமிறங்கி, அசால்ட் செய்து வருகிறார். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பு மற்றும் பரபரப்பு குறையால் மிகவும் டஃப் ஆன டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்த (Survivor) போட்டியில், கடைசி வரை தாக்குப்பிடித்து விளையாடும் நபருக்கு பரிசாக சுமார் ஒரு கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த போட்டியில் காடர்கள் அணி, வேடர்கள் அணி என்று, இரண்டு பிரிவினராக மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்கள். அதன்படி 16வது எபிசோட் வரை ஷோவை பரபரப்பாக வைத்துவந்த பார்வதி நேற்று முன்தினம் எலிமினேட் ஆனார்.

ALSO READ | Bigg Boss Tamil Season 5 Latest Updates: பிக்பாஸ் இல் சூப்பர் சிங்கர் பிரியங்கா

இந்நிலையி;ல் தற்போது இன்று புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அதில் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க போட்டி நடந்திருக்கிறது. அதில் போட்டியாளர்கள் தோளில் அதிகம் எடையை தாங்கி வேண்டும், அதிக நேரம் நிற்பவர் தான் வெற்றியாளர். இது ரொம்ப கடினமான டாஸ்க் என அர்ஜூனே கூறுகிறார்.

காடர்கள் டீமில் ராம் மற்றும் உமாபதி ராமையா மோதுகின்றனர். வேடர்கள் டீமில் நந்தா மற்றும் ஐஸ்வர்யா மோதுகின்றனர். இருபக்கமும் இருக்கும் எடையை தாங்கி நிற்க அவர்கள் போராடுகின்றனர். அதன் பின் மீண்டும் எடை கூட்டப்படுவது ப்ரொமோ வீடியோவில் காட்டப்பட்டு உள்ளது. இறுதியில் ஒரு போட்டியாளர் கீழே விழுந்து விபத்தில் சிக்க அவரை காப்பாற்ற அர்ஜுன் ஓடுகிறார். யாருக்கு என்ன ஆனது என்பது இன்றைய ஷோவில் தான் தெரியவரும். 
ப்ரோமோ இதோ..

ALSO READ | Bigg Boss Tamil Season 5: இரண்டாவது புரொமோ வீடியோ வெளியானது; கசிந்தது முக்கிய தகவல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News