’மாயம் இல்ல மந்திரம் இல்ல’ அந்தரத்தில் பறக்கும் மனிதர்: வைரல் வீடியோ

கண்ணாடியை வைத்து மேஜிக் செய்யும் ஒருவரின் வீடியோ காண்போரை வியக்க வைப்பதுடன் யோசிக்கவும் வைத்திருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 22, 2023, 11:08 AM IST
  • மாயம் இல்லை மந்திரம் இல்லை
  • அந்தரத்தில் பறக்கும் மனிதர்
  • இணையத்தில் வைரலான வீடியோ
’மாயம் இல்ல மந்திரம் இல்ல’ அந்தரத்தில் பறக்கும் மனிதர்: வைரல் வீடியோ title=

பிறரின் கண்களை அவர் முன்னே ஏமாற்றும் மாபெரும் வித்தை தான் மேஜிக். இருக்கும் ஒரு பொருளை மறைய வைப்பதும், இல்லாத ஒரு பொருளை வரவழைப்பதும் தான் மேஜிக். இது ஏதோ மாய வேலைகள் எல்லாம் இல்லை. சிறிய தந்திரம் தான். அதனை லாவகமாக செய்து எதிரே இருப்பவரை ஏமாற்றும் ஒரு வகையான வித்தை தான். இதை செய்து லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்களும் உண்டு. ஸ்மார்ட்போன் யுகம் வருவதற்கும் முன்பெல்லாம் இந்த வித்தைகளை வைத்து மக்களை எமாற்றிக் கொண்டிருந்தார்கள். ஊர் தோறும் கரிகாலன் மேஜிக் ஷோ என்று ஒரு கூடாரம் போட்டு நன்றாக சம்பாதித்தார்கள். ஆனால் ஸ்மார்ட்போன் யுகம் வந்து எல்லோர் கைகளிலும் மொபைல் போன் வந்ததும், இந்த மேஜிக் எல்லாம் ஒரு வகையான மோசடி என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள். அதாவது கண்முன்னே ஏமாற்றும் வித்தை என்பதை தெளிவாக புரிந்து கொண்டார்கள்.

மேலும் படிக்க | இது என்ன தலைகீழா இருக்கு!! பாம்பை பாடாய் படுத்தும் நாய்கள்... வைரல் வீடியோ

இப்போதெல்லாம் சிறிய குழந்தைகளைக் கூட ஏமாற்ற முடியாது. ஏனென்றால் பெரியவர்களைவிட சிறியவர்கள் தான் தங்களின் பொழுதுபோக்கிற்காக எப்போதும் மொபைல் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களை சுவாரஸ்யப்படுத்தும் விஷயங்களையும் வீடியோக்களையும் தேடி தேடி பார்க்கிறார்கள். அதில் முதன்மையான இடத்தில் இருப்பது மேஜிக் ஷோக்கள். அப்படி பார்க்கும்போது இதனை எப்படி செய்கிறார்கள் என்பதையும் தேடி பார்க்கிறார்கள். அப்படி பார்க்கும்போது மேஜிக் தந்திரங்களை பார்த்து கற்றுக் கொள்வதுடன், அட இவ்வளவு தானா? என்ற எண்ணத்துக்கு வந்துவிடுகிறார்கள். சிலர் மொபைல் வழியாக மேஜிக் கற்றுக் கொண்டு சுற்றியிருக்கும் சக குழந்தைகளிடம் விளையாட்டு காட்டக்கூட செய்கிறார்கள்.

அவர்களைப் பொறுத்தளவில் இது ஒரு வகையான பொழுதுபோக்கு விளையாட்டு. அப்படி இருப்பவர்களிடம் சென்று மேஜிக் செய்கிறேன் என வித்தை காண்பித்தால் அசிங்கப்பட வேண்டியிருக்கும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிறீர்களா? அவர்களை விட நீங்கள் ஸ்மார்டாக யோசித்தால் இன்னும் சிறப்பாக அந்த  வித்தையை அவர்களே ரசிக்கும்படி செய்து அசத்தலாம். அப்படியான ஒரு வீடியோ தான் இணையத்தில் இப்போது வைரலாகியிருக்கிறது. உங்கள் கண்களை நிஜம் போல் நம்ப வைத்து ஏமாற்றும் கண்ணாடி வித்தை வீடியோ அது. அதாவது மேல் உடல் மட்டும் வைத்துக் கொண்டு கால்களை அந்தரத்தில் பறந்து வருவதுபோல் ஒருவர் வேகமாக வருகிறார்.

ஸ்பைடர்மேன் போல் வருகிறாரே என பார்த்தால் காலில் ஸ்கேட்டிங் வைத்துக் கொண்டு, இடுப்பளவை கண்ணாடி கொண்டு மறைத்துவிட்டு, அந்த கண்ணாடியில் செட்டிங் காலை வைத்து கால்கள் அந்தரத்தில் இருப்பது போல் காட்டிக் கொண்டு வருகிறார். படிக்கும்போது உங்களுக்கு குழப்பமாக இருக்கலாம். வீடியோவாக பார்க்கும்போது உங்களுக்கு புரியும். இந்த வீடியோ இப்போது பலராலும் ரசிக்கப்படு வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: மிரட்டிய பெண் சிங்கம்.. அடங்கிப் போன ஆண் சிங்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News