அத குடுத்தா மொபைல் கிடைக்கும்: கராரா பேசி கரக்ட் பண்ண குரங்கு, வைரல் வீடியோ

Viral Video: சமீபத்தில் குரங்கு தொடர்பான ஒரு வித்தியாசமான வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதை பார்க்க மிக ஆச்சரியமாக உள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 23, 2023, 02:10 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான எக்ஸ் -இல் @AMAZlNGNATURE என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
அத குடுத்தா மொபைல் கிடைக்கும்: கராரா பேசி கரக்ட் பண்ண குரங்கு, வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

குரங்கு வீடியோகளுக்கென இணையத்தில் தனி கிரேஸ் உள்ளது. குரங்குகளின் கோமாளித்தனத்தையும் அவை செய்யும் சேட்டைகளையும் இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. குரங்குகள் செய்யும் பல வித குறும்புகளை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். 

சாலைகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசங்களுக்கும் அளவில்லை. சாலையில் நடந்து செல்பவர்களின் பொருட்களை பிடுங்குவது, வழிப்போக்கர்களின் தோளில் சென்று அமர்வது, அவர்களது முடியை பிடித்து இழுப்பது என இவை பல வழிகளில் மக்களை தொந்தரவு செய்கின்றன.  சில சமயம் விலைமதிப்பான பொருட்களையும் குரங்குகள் பிடுங்கிச் செல்வதுண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் மக்கள் வேறு சில பொருட்களை கொடுத்து தங்களது முக்கியமான பொருட்களை பெறுவது வழக்கம்.  

சமீபத்திலும் குரங்கு தொடர்பான ஒரு வித்தியாசமான வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதை பார்க்க மிக ஆச்சரியமாக உள்ளது. இந்த வீடியோவில் இருக்கும் இடம் ஒரு சுற்றுலா தலமாக தெரிகின்றது. அங்கே பலர் சுற்றிப்பார்க்க வந்திருக்கிறார்கள். அங்கு வந்துள்ள ஒரு பெண்ணின் மொபைல் போனை ஒரு குரங்கு பிடுங்கி பத்திரமாக தன்னிடம் வைத்துக்கொள்கிறது. 

அந்த பெண்ணுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவர் வேறு ஏதாவது ஒரு பொருளை கொடுத்து தனது போனை குரங்கிடமிருந்து வாங்க முயற்சிக்கிறார். முதலில் தின்பண்டங்கள் அடங்கிய ஒரு கவரை கொடுக்கிறார். ஆனால், குரங்கு அதை வாங்கிக்கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து அவர் தனது கைப்பையிலிருந்து ஒரு பழத்தை எடுத்து கொடுக்கிறார். அதை அந்த குரங்கு வாங்கிக்கொள்கிறது. ஆனால் அப்போதும் அந்த குரங்கு போனை கொடுக்கவில்லை. அந்த பெண் அதன் பின்னர் மற்றொரு பழத்தை கொடுக்கிறார். நல்ல வெளையாக அதன் பிறகு அந்த குரங்கு போனை போட்டுவிட்டு இரு பழங்களுடன் ஓடி விடுகின்றது. 

மேலும் படிக்க | Viral Video: குழாயில் தண்ணீரை அசால்டாக குடிக்கும் கில்லாடி கிளி..!

பேரம் பேசும் குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்:

வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான எக்ஸ் -இல் @AMAZlNGNATURE என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.  ‘இந்த குரங்குக்கு மிக நன்றாக பேரம் பேச தெரிந்திருக்கிறது’ என ஒரு பயனர் எழுதியுள்ளார். ‘புத்திசாலி குரங்கு!!’ என மற்றொரு பயனர் பாராட்டியுள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | மலைப்பாம்பின் மிருகத்தனமான போர்! யுத்தத்தில் ஜெயித்த கொமோடோ டிராகன்? வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News