மலைப்பாம்பின் மிருகத்தனமான போர்! யுத்தத்தில் ஜெயித்த கொமோடோ டிராகன்? வைரல் வீடியோ

Survival Of The Fittest: நீயா நானா? வெறித்தனமாய் சண்டை போடும் கொமோடோ டிராகன்! சுற்றி வளைத்து டஃப் ஃபைட் கொடுக்கும் விஷப்பாம்பு! மிருகத்தனமான வீடியோ வைரல்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 23, 2023, 01:40 PM IST
  • வெறித்தனமாய் சண்டை போடும் கொமோடோ டிராகன்
  • சுற்றி வளைத்து டஃப் ஃபைட் கொடுக்கும் விஷப்பாம்பு
  • கொடூர சண்டையில் ஜெயித்தது யார்?
மலைப்பாம்பின் மிருகத்தனமான போர்! யுத்தத்தில் ஜெயித்த கொமோடோ டிராகன்? வைரல் வீடியோ title=

மிருகத்தனமான மோதல் வீடியோ வைரல்: பார்க்கும்போதே பதைபதைக்க வைக்கும் இந்த சண்டை மிகவும் கோரமாக இருக்கிறது. பலவீனமான இதயம் உடையவர்கள் இதைப் பார்க்க வேண்டாம். ஆபத்தான மற்றும் அச்சுறுத்தும் சூழ்நிலையை விவரிக்க நாம் மிருகத்தனம் என்ற வார்த்தையை பயன்படுத்துவோம். இருவர் மூர்க்கத்தனமாக மோதிக் கொண்டால் அந்த சண்டையைப் பற்றி பேசும்போது, மிருகத்தனமான சண்டை என்று சொல்வோம்.

தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் மலைப்பாம்பு ஒன்றும், முதலையின் குடும்பத்தைச் சேர்ந்த கொமோடோ டிராகனும் வெறித்தனமாய் சண்டை போடுகின்றன. வாழ்வா சாவா என்ற போரில், நொடிக்கு நொடி பரபரப்பு எகிறுகிறதும். நீயா நானா என்ற பலப்பரிட்சையில், யார் ஜெயித்தது?

வீடியோ வைரல்...

போராட்டம் என்பதை விட, இது ஒரு உயிர் பிரச்சினை, இரண்டு சண்டைக்காரர்களும்மே மோதலை கைவிட தயாராக இல்லை.

சமூக ஊடக தளமான X வலைதளத்தில் Brutal Nature @BrutaINature1 என்ற பயனரின் கணக்கில் இந்த வீடியோ பகிரப்பட்டது. இந்த கடூரமான சண்டையை பார்த்து மகிழ்வது என்று சொன்னால், அது தவறு. கொடும் சண்டையை பார்த்து பதறினார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். மலைப்பாம்பின் தீவிர சண்டயை பார்த்து பல்லாயிரக்கணக்கானவர்கள் பதறினார்கள்.

மேலும் படிக்க | டான்ஸ் அழகா இல்லை மேக்கப் அழகா? இவ்வளவு நேர்த்தியா நடனம் ஆட முடியுமா? வீடியோ வைரல்

சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்

இந்த வீடியோவுக்கு பலரும் பல்வேறுவிதமான கருத்துக்களை பகிர்ந்திருந்தாலும், பதற்றம் தான் அதிகமாக இருக்கிறது. ஒரு பயனர், இப்படி கேட்கிறார்.... ”வென்றது யார்? இயற்கை பயமாக இருக்கிறது... இது ஒரு சாம்பிள் தான்....” மற்றொருவரோ, ”இயற்கை உண்மையிலேயே தகுதியானவர்களை தான் வாழ வைக்கும்” இந்தப் போரில் வென்ற வீரர்களுக்கு ஆயுள் கெட்டி” என்று வீரத்தை முன்னிலைப்படுத்துகிறார். 

மற்றும் ஒருவரோ, “சண்டையிடும் இரண்டு பேரை பிரிக்க வேண்டிய நேரத்தில் வீடியோ தயாரிப்பதில் மும்முரமாக இருக்கிறீர்களா?” என்று திட்டினால், அதற்கு பதில் சொல்லும் ஒருவர், வொய் திஸ் கொலைவெறி?” சண்டை போடுறவங்க உயிருக்கு ஆபத்து வந்தா அதுலயாவது அர்த்தம் உண்டு, ஆனா, பார்க்கப் போனவங்களையும் சாவச் சொல்றீங்களா பாஸ்?” என்று கேள்வி எழுப்புகிறார்.

ஆனால், விலங்குகள் எப்போதுமே இப்படிச் சண்டையிடும் என்று நினைப்பது பைத்தியக்காரத்தனம், வழக்கமான விஷயங்கள் பகிரப்படுவதில்லை, அரிதான நிகழ்வுகளே பகிரப்படும் என்பதால், இதை பார்த்து, நம்மால் நேரில் பார்க்க முடியாத விஷயங்களை நமக்குக் கொடுப்பவர்களை பாராட்டுங்கள் என்று மற்றும் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | Viral Video: ஸைபடர்மேன் அவதாரம் எடுத்து... மிரள வைத்த மியாவ் பூனை...!

மிருகத்தனமான சண்டை

கொமோடோ டிராகன், பாம்பு விஷத்தால் பாதிக்கப்படாத அளவுக்கு விஷம் பொருந்தியதாக இருக்கலாம். இல்லையெனில் இத்தனை பாம்புக்கடி வாங்கிய பிறகும் உயிர் பிழைத்திருக்காது என்று பலரும் சொல்கின்றனர். 

ஆனால், மற்றும் ஒருவரோ, “கொமோடோவின் தீவிரமான சண்டையால், இறுதியில் பாம்பின் கதை முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சில சமயங்களில் பாம்புகள் தவறான இரையைத் தேடிச் செல்கின்றன” என்று பாம்புக்காக பரிதாபப்படுகிறா. இன்னும் ஒருவர், “கட்டாயப்படுத்துபவர்களிடமிருந்து, அதாவது நம்மை சுற்றி நம்மை அடக்கி ஆள்பவர்களிடம் இருந்து நமது விடுதலைக்காக  போராட வேண்டும்!” என்று கருத்து சொல்கிறார்.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | மாத்தி யோசி! அதுக்குன்னு இப்படியா? ஓட்டுநரை கலாய்க்கும் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News