சிங்க கூட்டத்தை வெச்சி செஞ்ச குரங்குகளின் கூட்டம்.. செம பல்பு: வீடியோ வைரல்

Lion Vs Monkey Video: வைரலாகி வரும் வீடியோவில், குரங்குகள் சிங்கங்களை எப்படி வம்பிழுக்கிறது என்பதை பார்க்கலாம். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 24, 2023, 03:35 PM IST
  • புத்திசாலித்தனமாக பாலத்தின் கீழ் ஒளிந்துகொண்டு வம்பிழுக்கின்றது.
  • தொடர்ந்து சிங்கக் கூட்டத்தை கிண்டல் செய்ய ஆரம்பிக்கிறது
  • இன்றைய வைரல் வீடியோ.
சிங்க கூட்டத்தை வெச்சி செஞ்ச குரங்குகளின் கூட்டம்.. செம பல்பு: வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். சமூக ஊடகங்களில் குரங்குகள் செய்யும் பல அட்டகாசங்களின் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. குரங்குகளின் மனநிலையை கணிப்பது கடினம். ஒரு சமயம் அமைதியாக இருக்கும் இவை அடுத்த கணமே அட்டகாசம் செய்யத் துவங்கிவிடும். அதனால்தான் அடிக்கடி தன் கருத்தை மாறி மாறி கூறுபவர்களை குரங்கு புத்தி என குறிப்பிடுகிறார்கள். 

மேலும் படிக்க | தண்ணீரில் தத்தளித்த மான் குட்டியை வாயில் கவ்வி காப்பாற்றிய நாயின் வைரல் வீடியோ

சாலைகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசங்களுக்கும் அளவில்லை. சாலையில் நடந்து செல்பவர்களின் பொருட்களை பிடுங்குவது, வழிப்போக்கர்களின் தோளில் சென்று அமர்வது, அவர்கது முடியை பிடித்து இழுப்பது என இவை பல வழிகளில் மக்களை தொந்தரவு செய்கின்றன. கோயில்களில் கூட குரங்குகளிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். எனினும், தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோ, குரங்குகள் தொடர்பான மிகவும் வேடிக்கையான மற்றும் அற்புதமான வீடியோவாக இருக்கின்றது. இதை பார்த்தால் கண்டிப்பாக யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது. 

வைரலாகும் இந்த வீடியோவில், காட்டில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் சிங்க கூட்டம் எப்படி ஓய்வெடுக்கிறது என்பதை பார்க்கலாம். சிறிய மற்றும் பெரிய சிங்கங்கள் அனைத்தும் வரிசையில் கிடக்கின்றன, சில பாலத்தின் ஓரத்தில் அமர்ந்துள்ளன. பாலத்திற்குக் கீழே ஒரு குரங்குப் படை ஓய்வெடுக்கிறது. இப்போது சிங்கக் கூட்டம் இங்கு வந்திருப்பது குரங்குகளுக்குத் தெரிய வந்துள்ளது. அவர்கள் புத்திசாலித்தனமாக பாலத்தின் கீழ் ஒளிந்துகொண்டு வம்பிழுக்கின்றது. தொடர்ந்து சிங்கக் கூட்டத்தை கிண்டல் செய்ய ஆரம்பிக்கிறது. நீண்ட நேரம் சிங்கக் கூட்டம் கடுப்பாகி ஒண்ணும் செய்ய முடியாமல் தவிக்கிறது.

சிங்கம் மற்றும் குரங்கின் வீடியோவை இங்கே காணுங்கள்:

குரங்கின் இந்த வேடிக்கையான செயல்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்த வீடியோ வேகமாக வைரல் ஆகி வருகின்றது. குரங்கின் இந்த வேடிக்கையான வீடியோ யூடியூபில் Latest Sightings என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோ ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | பீச்சில் அலைக்குள் புகுந்து ஜாலியாக குளியல் போட்ட கரடி; வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News