பீச்சில் அலைக்குள் புகுந்து ஜாலியாக குளியல் போட்ட கரடி; வைரல் வீடியோ

அமெரிக்காவின் புளோரிடா பகுதியில் கடலுக்குள் புகுந்து கரடி ஒன்று ஜாலியாக குளித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 24, 2023, 01:15 PM IST
  • கடலுக்குள் நீச்சலடிக்கும் கரடி
  • புளோரிடாவில் எடுக்கப்பட்ட வீடியோ
  • இணையத்தில் வைரலாகியுள்ளது
பீச்சில் அலைக்குள் புகுந்து ஜாலியாக குளியல் போட்ட கரடி; வைரல் வீடியோ title=

புத்துணர்ச்சியூட்டும் கடல் அலைகளுக்குள் உங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒரு அழகான கடற்கரையில், சூடான சூரிய ஒளியில் குளித்துக் கொண்டிருப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். அது ஒரு அலாதி பிரியம். சுற்றுலா செல்ல வேண்டும் என்ற எண்ணம் கொண்ட எல்லோருக்கும் அப்படி ஒரு குளியல் போட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் அப்படி குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென அந்த அலைகளுக்கு நடுவே ஒரு கரடி வந்தால்? உங்களுக்கு எப்படி இருக்கும். புளோரிடாவில் கோடை விடுமுறையை கடலில் நீராடிக் குளித்துக் கொண்டிருக்கும்போது, திடீரென அலைகளுக்கு நடுவே கரடி வந்திருக்கிறது. அதுவும் ஆனந்த குளியல் போட்டுவிட்டு, மனிதர்களை பார்த்தவாறு வேகவேகமாக ஓடி காட்டுக்குள் புகுந்திருக்கிறது.

மேலும் படிக்க | இசை எனும் இன்ப வெள்ளத்தை ரசிக்க ஓடோடி வந்த மான் - வைரல் வீடியோ

இந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. புளோரிடாவின் டெஸ்டின் நகரில் உள்ள வளைகுடா கடற்கரை கடற்கரையில் தான் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்களால் இதனை நம்பவே முடியவில்லை. சிலர் அதிர்ச்சியின் உச்சத்துக்கு சென்றுவிட்டார்கள். கரடி தாக்கிவிடுமோ என்று பயந்துவிட்டனர். ஆனால், கரடி தான் தப்பித்தால்போதும் என குளித்து முடிந்தவுடன் ஓடிவிட்டது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் வழக்கம்போல் கமெண்டுகளை ஜாலியாக அள்ளி வீசியுள்ளனர். கரடியும் கோடை விடுமுறையில் இருக்கிறது. அது குளிக்கும் இடத்துக்கு உங்களை யார் போகச் சொன்னது. அதனுடைய இடத்துக்கு நீங்கள் சென்றால் பயந்து தான் ஆக வேண்டும். எப்படியோ உங்களை அது எதுவும் செய்யாமல் விட்டுவிட்டதே என்று எண்ணி மகிழ்ச்சி கொள்ளுங்கள் என கமெண்ட் அடித்துள்ளார். இன்னும் சிலர், கோடை வெப்பத்தின் கடுமையை இப்போதாவது உணர்ந்து கொள்ளுங்கள். விலங்குகளால் கூட அதனை சமாளிக்க முடியவில்லை. அதனால் தான் நீர் நிலைகளை நோக்கிபடையெடுக்கின்றன என தெரிவித்துள்ளார். 

இந்த வீடியோ குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் புளோரிடா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணையம் (FWC),  இது அசாதாரணமானது என்று குறிப்பிட்டுள்ளது. ஒரு வயது கரடி நெரிசலான கடற்கரையின் ஆழமற்ற நீரில் நீந்துகிறதை பார்ப்பது வழக்கத்திற்கு மாறானதாக இருந்தாலும், வளைகுடாவில், உணவு தேடி தீவுகளுக்குச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | சரக்கடித்து மட்டையான குரங்கு... விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்: ஷாக்கிங் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News