கன்றுக்குட்டியுடன் நாய்க்கும் பாலூட்டும் தாய்ப்பசு - வைரல் வீடியோ

ஒரே நேரத்தில் கன்றுக்குட்டிக்கும், நாய்க்குட்டிக்கும் தாய் பசு பாலூட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 1, 2023, 10:35 PM IST
  • கன்றுக்குட்டியுடன் நாய்க்குட்டிக்கு பாலூட்டும் தாய்ப்பசு
  • இணையத்தில் வைரலாகும் வீடியோ
கன்றுக்குட்டியுடன் நாய்க்கும் பாலூட்டும் தாய்ப்பசு - வைரல் வீடியோ title=

இணையத்தில் நாள்தோறும் பதிவிடப்படும் ஆயிரக்கணக்கான வீடியோவில் ஒரு சில வீடியோக்கள் மட்டுமே நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகும். அப்படி, இன்று வைரலாகியிருக்கும் வீடியோவில் தாய்ப்பசு ஒன்று, கன்றுக்குட்டிக்கும், நாய்க்குட்டிக்கும் ஒரே நேரத்தில் பாலூட்டுகிறது. பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக அந்த வீடியோ நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. குட்டி நாயும், கன்றும் மெதுவாக தாய் பசுவின் மடியில் இருந்து பாலைக் குடிக்கின்றன.

மேலும் படிக்க | விமானத்தில் கதறி அழும் குழந்தையை தூங்க வைக்கும் பணிப்பெண்! வைரல் வீடியோ!

தாய் பசுவானது அமைதியாக நின்று கொண்டிருக்கிறது. நாய்க்குட்டி குடிக்கிறது என பசு எந்த தொந்தரவும் செய்யவில்லை. அதேபோல், அந்தப்பக்க மடியில் பால் குடிக்கும் இளம் கன்றும் நாய்க்குட்டியை துரத்திவிடவில்லை. எல்லா இடங்களிலும் இதுபோன்ற காட்சியை பார்க்க முடியாது. உலகின் ஏதேனும் ஒரு மூலையில் மட்டுமே இப்படியான அதிசயக் காட்சிகள் அரங்கேறும். இதனை அழகாக படம் பிடித்து டிவிட்டரிலும் பதிவிட்டுள்ளார்.

இதுவரை சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் ரீடிவீட் செய்துள்ளனர். வீடியோவுக்கு கீழ் கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், இப்போது அந்த விலங்குகள் சொர்க்கத்தில் இருக்கின்றன. இந்த பூமியில் படைக்கப்பட்ட அழகான ஜீவன்கள் என்றெல்லாம் கூறியுள்ளனர்.  

மேலும் படிக்க | Russia vs Ukraine: போரை நிறுத்த நாட்டாமை செய்யும் இந்திய சாமியார்! வீடியோ வைரல்...

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News