வைரலாகும் ‘நடிகையர் திலகம்’ படத்தின் போட்டோ ஸ்டில்ஸ்!!- See Inside!!

தென்னிந்திய சினிமாவை கலக்கிய மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. 

Updated: May 12, 2018, 08:25 AM IST
வைரலாகும் ‘நடிகையர் திலகம்’ படத்தின் போட்டோ ஸ்டில்ஸ்!!- See Inside!!

தென்னிந்திய சினிமாவை கலக்கிய மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரிலும், தெலுங்கில்  ‘மகாநதி’ என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சாவித்திரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சாவித்திரி வேடத்திற்காக தினமும் நான்கு மணி நேரம் மேக்கப் போட்டி நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அதேபோல, படத்தின் நாயகனா "ஜெமினி கணேசன்" வேடத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வரும், இந்த படத்தை அஸ்வின் நாக் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ‘நடிகையர் திலகம்’ (மகாநதி) திரைப்படத்தின் ஸ்டில்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. 

இதோ உங்கள் பார்வைக்கு!!

கடந்த மே 2-ம் தேதி ‘நடிகையர் திலகம்’ (மகாநதி) படத்தின் இசை வெளியிடப்பட்டது. இந்த இசை வெளியிட்டு விழாவிற்கு அக்னினேனி நாகார்ஜூனா, ஜூனியர் என்.டி.ஆர், நானி, இயக்குனர் சேகர் கம்முலா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துக்கொண்டனர். இந்த படம் வரும் மே 9ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.