Watch Video: இனிப்பு கடையில் புகுந்த நாய், கடைக்காரர் செய்ததை பாருங்கள்

இனிப்பு கடையில் ஓரு நாய் புகுந்து அங்குள்ள இனிப்பு கௌண்டருக்குள் ஆட்டம் போட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவுக்கு இதுவரை ஏகப்பட்ட பார்வையாளர்கள் கிடைத்துள்ளதோடு, பல விதமான கமெண்டுகளையும் அளித்து வருகின்றனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 26, 2021, 05:40 PM IST
  • இனிப்பு கடைக்குள் புகுந்தது நாய்.
  • நாயை விரட்ட திண்டாடுகிறார் கடைக்காரர்.
  • சமூக ஊடகங்களில் வைரல் ஆகிறது வீடியோ.
Watch Video: இனிப்பு கடையில் புகுந்த நாய், கடைக்காரர் செய்ததை பாருங்கள் title=

புதுடெல்லி: இனிப்பு சாப்பிட மனம் விரும்பினால், நாம் பொதுவாக இனிப்பு கடைகளுக்கு சென்று நமக்கு விருப்பமான இனிப்பு வகைகளை வாங்கி சாப்பிடுவோம். அப்படி நீங்கள் இனிப்பு வகைகளை தேர்ந்தெடுக்கும் போது, இனிப்புகள் வைக்கப்பட்டிருக்கும் கௌண்டரில் ஒரு நாய் இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்? நினைத்துப் பார்க்கவே வினோதமாக இருக்கிறது. 

ஆனால் இது போன்ற ஒரு நிகழ்வு நிஜமாகவே நடந்துள்ளது. அந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் (Social Media) மிகவும் வைரலாகி வருகிறது.ஏதாவது சாப்பிடும் எண்ணத்தில் ஒரு நாய் திடீரென்று ஒரு இனிப்புக் கடைக்கு வருகிறது. அங்கு இனிப்புகள் வைக்கப்பட்டிருக்கும் கௌண்டர் அதன் கண்ணில் படுகிறது. நாயும் அந்த இனிப்பு கௌண்டரில் நுழைகிறது. அதற்குள் கடைக்காரர் கௌண்டருக்குள் பார்த்து விடுகிறார். 

இனிப்புகளின் கவுண்டரில் ஆர்ப்பாட்டம்

இனிப்புகள் வைக்கப்பட்டிருக்கும் கௌண்டருக்குள் நாயைப் பார்த்து, கடைக்கார் அதிர்ச்சியடைகிறார். பின்னர் அதை விரட்ட முயற்சிக்கிறார். ஆனால் நாய் கௌண்டருக்குள்ளேயே ஓடத் தொடங்குகிறது. இதனால் கௌடரில் வைக்கப்பட்டிருந்த அனைத்து இனிப்பு வகைகளும் பாழாகின்றன. 

ALSO READ: Watch Video: Photo எடுத்த பெண்ணுக்கு முத்தம் கொடுத்த சிம்பன்சி அதன் பிறகு செய்தது என்ன? பாருங்கள்...

இந்த வீடியோவைப் பார்த்தால் உங்களுக்கும் கண்டிப்பாக சிரிப்பு வரும். ஏனெனில் இதில் நாயின் தவறும் இல்லை, கடைக்காரரின் தவறும் இல்லை. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Minda Bai (@minda_bai)

சமூக ஊடகங்களில் வேடிக்கையான கமெண்டுகள் வருகின்றன. 

இந்த வீடியோவை (Viral Video) போஸ்ட் செய்த நபர், வீடியோவுடன் “இது ஒரு இனிப்பு கடை, இது ஒரு நாய், கடைக்காரர் நாயை விரட்டுகிறார்” என்று எழுதியுள்ளார். இந்த வீடியோ 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவின் கமெண்ட் பிரிவில் பலர் கருத்து தெரிவிக்கின்றனர். சிலர் 'நாய் செய்யும் அட்டகாசம்’ என்றும் சிலர், ‘இதையும் இப்படியே விற்று விடுவார்கள்’ என்றும் எழுதியுள்ளார்கள்.

ALSO READ: 450 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட உலகின் மிகப்பெரிய ஓவியம்: அளவைக் கண்டு அசந்து போவீர்கள்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News