2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற நோராவின் நடன வீடியோ பாடல்

நோரா ஃபதேஹி நடனமாடி உள்ள "ஏக் தோ கம் ஜிண்தகானி" பாடல் இதுவரை 2 கோடிக்கு அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Oct 13, 2019, 04:19 PM IST
2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற நோராவின் நடன வீடியோ பாடல்
Pic Courtesy : Youtube Grab

புதுடெல்லி: பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா (Siddharth Malhotra) மற்றும் தாரா சுத்தாரியா (Tara Sutaria) ஆகியோரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "மர்ஜாவான்" (Marjaavaan) படத்தின் "ஏக் தோ கம் ஜிண்தகானி" பாடல் வெளியான முதல் நாளிலிருந்து சமூக ஊடகங்களில் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்த பாடலின் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் என்னவென்றால், இந்த பாடலில், நோரா ஃபதேஹி தனது கவர்ச்சியான நடனத்தை காட்டி உள்ளார். மீண்டும் ஒரு முறை நோராவின் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அக்டோபர் 10 ஆம் தேதி டி-சீரிஸால் வெளியிடப்பட்ட இந்த பாடல் இதுவரை 2 கோடிக்கு அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.

இந்த பாடல் பிரபல நடிகை ரேகாவின் பிறந்த நாளில் வெளியிடப்பட்டது, ஏனெனில் இந்த பாடல் ரேகாவின் பழைய பாடலின் ரீமேக் பதிப்பாகும். இந்த பாடலில், நோரா மீண்டும் தனது ஆற்றல் மிக்க நடனம் அவதாரத்தில் காணப்படுகிறார். இப்படத்தை மிலப் ஜாவேரி இயக்கியுள்ளார். ரித்தேஷ் தேஷ்முக் ஒரு குள்ள வில்லனாக நடிக்கிறார். "மர்ஜாவான்" படம் நவம்பர் 22 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

 

இது தவிர, வருண் தவான் மற்றும் ஷ்ரத்தா கபூரின் "ஸ்ட்ரீட் டான்சர்" படங்களில் நோரா ஃபதேஹி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நோரா ஒரு நடனக் கலைஞராகக் காணப்படுவார். படம் ஜனவரி 24, 2020 அன்று வெளியிடப்பட உள்ளது.