டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்றுக் கொடுத்த குத்துச்சண்டை வீராங்கனைக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்துள்ளன. ஒவ்வொருவரும் வாழ்த்தும் விதம் வேறுபட்டாலும், சில வாழ்த்துக்களும் சாதனையை ஏற்படுத்துகின்றன.
பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், டோக்கியோவில் வெண்கலப் பதக்கம் வென்ற வெண்கல மங்கை லவ்லினா போர்கோஹைனை தனது பாணியில் வாழ்த்தியிருக்கிறார். மாபெரும் குத்துச்சண்டை கையுறைகளை மணற்சிற்பமாக உருவாக்கிய அவர் அதன் மூலம் லவ்லினா போர்கோஹைனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
#PrideOfIndia
I am dedicating my 10ft long sand glove to @LovlinaBorgohai for winning bronze medal for our country.#TokyoOlympics2020. My SandArt at Puri beach in Odisha. pic.twitter.com/lGuyidOCM— Sudarsan Pattnaik (@sudarsansand) August 4, 2021
10 அடி குத்துச்சண்டை கையுறைகளை மணற்சிற்பமாக உருவாக்கிய சுதர்சன் "இந்தியாவின் பெருமை" என்ற செய்தியுடன் லவ்லினாவுக்காக இந்த கலைப் படைப்பை உருவாக்கினார்.
ஒடிசாவின் பூரி கடற்கரையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெயினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மணற் சிற்பத்தை, கையுறையைப் போல 10 அடி நீளத்தில் உருவாக்கியிருக்கிறார் பிரபல மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.
Also Read | ஜெகநாதர் ரத யாத்திரை 2020: மணல் சிற்பம் உருவாக்கி இறைவனுக்கு சுதர்சன் பட்நாயக் வாழ்த்து
டோக்கியோவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின் 69 கிலோ பிரிவில் வெற்றி பெற்றார் லவ்லினா. மகளிருக்கான வெல்டர்வெயிட் அரையிறுதிப்போட்டியில் (women’s welterweight semifinal) தோல்வியடைந்த லவ்லினா, வெண்கலத்தை வென்றார்.
லவ்லினாவுக்காக 10 அடி குத்துச்சண்டை கையுறைகளை உருவாக்கிய சுதர்சன் "இந்தியாவின் பெருமை" என்று சிற்பத்துக்கு பெயர் சூட்டியிருக்கிறார்.
உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த லவ்லினாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், உருவாக்கப்பட்டிருக்கும் கையுறை மணல் சிற்பத்தில் சுமார் 8 டன் மணல் பயன்படுத்தப்பட்டுள்ளது "ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினாவை நாங்கள் வாழ்த்துகிறோம்," என்று சுதர்சன் பட்நாயக் கூறினார்.
Also Read | Tokyo Olympics 2020: அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வி, வெண்கலம் கைகூடுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR