கடவுளே! ஒரு காதலன் செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல்

Funny Viral Video: ஆற்றின் கரையோரும் அமர்ந்து காதலர்களின் இந்த செயல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 31, 2022, 11:38 AM IST
  • இதை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் ரியாக்ட் செய்து வருகின்றனர்.
  • காதலியின் தலையில் பேன் பார்த்த காதலன்.
  • செம காமெடியான வைரல் வீடியோ.
கடவுளே! ஒரு காதலன் செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர். சமீப காலங்களில் திருமண வீடியோக்கள், காதலர்களின் வீடியோக்கள், விலங்குகளின் வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன. அதன்படி இங்கு காதலர்களின் வீடியோக்கள் ஒன்று வைரலாகி வருகின்றது. இதில், காதலர்கள் இருவரும் ஆற்றங்கரையோரத்தில் அமர்ந்திருந்தாலும், அவர்களின் வேடிக்கையான செயல் உங்களை கட்டாயம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும், சிறிப்பை அடக்குவது கடினம் என்றே கூறலாம். 

இந்த வீடியோ வெளியான சில மணி நேரங்களில் மில்லியனுக்கும் அதிகமான பார்வையார்களை பெற்றுள்ளது. மேலும் 1.61 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல விதங்களில் இதற்கு ரியாக்ட் செய்து வருகின்றனர். இதைப் பார்த்து சிலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டால், சிலருக்கோ சிரிப்பு வருகிறது. சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவை பார்க்கும்போது, காதலன் மற்றும் காதலி இருவரும் டேட்டிங்கில் இருப்பது போல தெரிகிறது. அத்துடன் இவர்கள் இருவரும் ஆற்றங்கரையில் அமர்ந்திருப்பதும் இந்த வீடியோ மூலம் தெரிகிறது.

மேலும் படிக்க | திருமணத்தில் மணமகன் செய்த வேலை: ஷாக் ஆன மணமகள், வீடியோ வைரல்

காதலியின் தலையில் பேன் பார்த்த காதலன்
இந்த வீடியோவில் காதலி ஆற்றங்கரையோரத்தில் உள்ள ஒரு படிக்கட்டுகளில் அமர்ந்து இயற்கைக் காட்சியை ரசித்துக் கொண்டிருக்கிறாள். அதேசமயம் காதலனும் காதலிக்கு மேலே இருந்த படியில் அமர்ந்திருக்கிறான். திடீரென்று காதலன் காதலியின் தலையில் பேன் பார்க்க ஆரம்பிப்பது தான் வீடியோவை வேடிக்கையானதாக மாற்றியது. உண்மையில், காதலன் அவரது காதலியின் தலையிலிருந்து பேன்களை ஆர்வத்துடன் அகற்றுகிறார். இந்த காட்சியை அந்த வழியாக சென்ற நபர் ஒருவர் தனது கேமராவில் படம் பிடித்துள்ளார், மேலும் இந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியத்துள்ளார். அதன்படி இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

காதலியின் தலையில் ஆவர்வமாக பேன் பார்க்கும் காதலனின் வீடியோவை இங்கே காணலாம்: 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by memes comedy (@ghantaa)

சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் வேடிக்கையான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதன்படி இந்த வீடியோ ghantaaஎன்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | கிணற்றுக்குள் விழுந்த பூனையின் திக் திக் நிமிடங்கள்.. வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News