யானைகள் பார்ப்பதற்கு அளவில் பெரியதாக இருந்தாலும் அவை செய்யும் சேட்டைகள் சில சமயம் நகைச்சுவையாகவும், ரசிக்கும்படியாகவும் இருக்கும். அதுவே யானைகளுக்கு கோபம் வந்தால் அதனருகில் எவ்வளவு பயங்கரமான மிருகமும் நெருங்க முடியாது, யானைக்கு மதம் பிடித்துவிட்டால் அவ்வளவு எதிரே வரும் எத்தனை உயிர்கள் பறிபோகும் என்றே சொல்லமுடியாது. ஆபத்தும் அழகும் நிறைந்த விலங்காக யானை விளங்குகிறது, இணையத்தில் யானைகளின் வீடியோக்களை பார்த்து ரசிப்பதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இப்போதும் ரசிகர்களை கவரும் வகையில் ஒரு யானையின் வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | பூனைக்கு GYM TRAINER-ஆக மாறிய சிறுமி... வைரலாகும் வீடியோ!
இந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது, அந்த வீடியோவில் மழை மேகம் சூழ்ந்த ரம்மியமான இடத்தில ஒரு ஒத்தையடி பாதி இருப்பதையும், ஓரத்தில் யானை ஒன்று மரத்தின் அருகில் நிற்ப்பதையும் காண முடிகிறது. அந்த யானை என்ன செய்கிறது என்று பார்த்தால் அந்த மரத்தை தனது தும்பிக்கையை வைத்து ஒரே முட்டில் அடியோடு முட்டி கீழே சாய்த்து விடுகிறது. மரம் அப்படியே கீழே சாய்ந்து பாதையை மறைத்து கிடக்க அந்த யானை மரத்தின் மீது கெத்தாக ஏறி அமர்ந்துகொண்டு செய்யும் குறும்புத்தனமான செயல் இணையவாசிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
Apparently, some things require bold and decisive actions.. pic.twitter.com/kShLnTrxHx
(@Yoda4ever) November 4, 2022
அந்த வீடியோவில் மழை மேகம் சூழ்ந்த இயற்கையான இடம் பார்ப்பதற்கு பரவசத்தை தருவதாக இருக்கிறது, அதற்கேற்ப அந்த யானையின் செயல் கூடுதல் ரசனையை தருகிறது. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கான இணையாவசிகள் பார்த்து ரசித்திருப்பது மட்டுமின்றி லைக் மற்றும் கமெண்டை வாரி வழங்கி வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ