'ஓரமா போங்க ப்ரோ’: ஆமையிடம் பல்பு வாங்கிய முதலை.. செம காமெடி வைரல் வீடியோ

Funny Viral Video: முதலைக்கு பல்பு கொடுத்த ஆமையின் இந்த வீடியோவை பார்த்தால் நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியாது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 1, 2023, 03:42 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான்ன ட்விட்டரில் @Yoda4ever என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோ ஏற்கனவே பகிரப்பட்ட ஒரு பழைய வீடியோ.
  • இது இப்போது மீண்டும் வைரல் ஆகி வருகின்றது.
'ஓரமா போங்க ப்ரோ’: ஆமையிடம் பல்பு வாங்கிய முதலை.. செம காமெடி வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

வன விலங்குகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவற்றில் நாம் அதிகசயிக்கும் வண்ணம் பல காட்சிகள் காணப்படுகின்றன. வன விலங்குகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டவுடன் வைரல் ஆகி விடுகின்றன. வன விலங்குகளில் நீருக்கடியில் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படும் முதலையை எதிர்கொள்ளத் துணிவது மிகச் சில விலங்குகளே. ஏனெனில் அது தன் இரையை உறுதியாகப் பிடித்துக் கொள்கிறது. அதன் பிடியிலிருந்து விடுபடுவது அத்தனை சுலபம் அல்ல. 

ஆனால் சில நேரங்களில் புத்திசாலித்தனம் வலிமையை விட பெரிதாக இருக்கும். சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோ இதற்கு சாட்சியாக உள்ளது. இதில் ஒரு ஆமை மிக சாதுர்யமாக முதலையின் முன் கிடக்கும் உணவை பிடுங்கிக்கொள்கிறது. ஆனால் அப்போது முதலையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வைரலாகி வரும் வீடியோவை பார்த்தால் நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியாது. 

தூங்கியவன் தொலைந்தான்

வெறும் 8 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், குளத்தின் கரையில் பெரிய முதலை ஒன்று இருப்பதைக் காண முடிகின்றது. ஆமை ஒன்று அதற்கு அருகில் தண்ணீருக்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்கிறது. அப்போதுதான் மேலே இருந்து ஒருவர் தண்ணீருக்குள் சாப்பிட எதையோ வீசுகிறார். பசியுடன் இருக்கும் முதலை உடனடியாக முன்னால் சென்று அந்த உணவுப் பொருளைப் பிடிக்கத் தொடங்குகிறது. அப்போது, ​​கரையிலிருந்து ஒரு ஆமை வெளிவருகிறது. அது முதலையின் வாயிலிருந்து அந்த உணவைப் பிடுங்கிக்கொண்டு சென்றுவிடுகிறது. இந்தக் காட்சி மிகவும் வேடிக்கையாகவும் வினோதமாகவும் உள்ளது. பொதுவாக எந்த ஒரு சிறிய விலங்கும் கொடூரமான முதலைக்கு முன்னால் வரக்கூட அச்சப்படும். ஆனால் இந்த ஆமை, முதலைக்கு முன்னால் வந்ததோடு மட்டுமல்லாமல், முதலையின் உணவையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டது. 

மேலும் படிக்க |  Viral Video: தில்லான ஆசாமி தான்... ஆக்டோபஸிடம் சிக்கியும் அஞ்சாத நபர்..!!

நம்ப முடியாத அந்த வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 

இணையத்தில் வீடியோ வைரல் ஆனது:

இந்த வீடியோ சமூக ஊடக தளமான்ன ட்விட்டரில் @Yoda4ever என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ ஏற்கனவே பகிரப்பட்ட ஒரு பழைய வீடியோ. இது இப்போது மீண்டும் வைரல் ஆகி வருகின்றது. இது ஜூலை 25 அன்று வெளியிடப்பட்டது. செய்தி எழுதும் நேரம் வரை, 1 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் இந்த வீடியோ பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ஒரே நேரத்தில் பல முதலைகளை முட்டாள்களாக்கிய சேவல்: ஆச்சரியமளிக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News