காபி குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை என்றாலும், அதனை யார் குடிக்க வேண்டும்?, யாரெல்லாம் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்?, காபி குடிப்பது உடல் எடையை குறைப்பதில் எந்த அளவில் பங்கு வகிக்கிறது? என்ற பொதுவான கேள்விகளுக்கு விடை தேடுவது அவசியம். நியூட்ரிகேர் டயட் கிளினிக்கின் இணை நிறுவனர் டயட்டீசியன் ஷிகா ஸ்ரீவாஸ்தவா, காபி குடிப்பது உடல் எடையை குறைக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார்.
அவர் கொடுத்திருக்கும் விளக்கத்தில் காபியில் உள்ள காஃபின் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தி, கொழுப்பை எரிப்பதை மேம்படுத்தும் என்கிறார். மேலும், காபி குடிப்பதை மீடியமாக வைத்துக்கொள்ளும்போது உடல் எடையை குறைப்பதில் கணிசமான பங்கு வகிக்கிறது என்கிறார். இருப்பினும் இது குறித்து இன்னும் போதுமான ஆராய்ச்சிகள் நடத்தப்பட வேண்டியிருக்கிறது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார் ஸ்ரீவாஸ்தவா.
மேலும் படிக்க | Uric Acid: எகிறும் யூரிக் அமிலத்தை விரட்டி அடிக்கும் சில மேஜிக் இலைகள்
காபி குடிப்பதால் உடல் எடையை எப்படி குறைக்கலாம்?
காபி குடிக்கும்போது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதாவது, மத்திய நரம்பு மண்டலம் காஃபின் மூலம் தூண்டப்படுகிறது, இது உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கும் மற்றும் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.
பசியை அடக்கும் மருந்து: காபி பசியை தற்காலிகமாக அடக்கி, சிலருக்கு குறைவான கலோரிகளை உட்கொள்ள அனுமதிக்கிறது.
உடல் செயல்திறன் அதிகரிப்பு: காபியின் காஃபின் உள்ளடக்கம் உடல் செயல்திறனை மேம்படுத்துவதோடு உடற்பயிற்சிகளின் செயல்திறனையும் அதிகரிக்கும்.
யார் காபி குடிக்க வேண்டும்?
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க விரும்பும்பவர்கள் யாராக இருந்தாலும் மிதமான அளவில் காபி குடிக்கலாம். உடல் ரீதியாக சுறுசுறுப்பு தேவைப்படுபவர்கள், மெதுவான வளர்ச்சிதை மாற்றம் உள்ளவர்கள் காபி குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
காபியை யார் தவிர்க்க வேண்டும்?
கர்ப்பிணிப் பெண்கள்: காஃபின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது முக்கியம், ஏனெனில் அதிக அளவு காஃபின் கர்ப்ப சிக்கல்களுடன் தொடர்புடையது. கவலை அல்லது தூக்க பிரச்சனைகள் உள்ளவர்கள், இதயம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள், உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் காபி குடிப்பதை தவிர்க்கலாம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் காபி குடிப்பதில் பிரச்சனை இல்லை. அதேபோல், ஆசிட் ரிஃப்ளக்ஸ் அல்லது செரிமான பிரச்சனைகள் உள்ள நபர்கள் காபி குடிக்க வேண்டாம். காபி அமிலமானது இரைப்பை குடல் பிரச்சனைகளை அதிகப்படுத்தும்.
சரியான அளவு காபி என்ன?
ஒரு நாளைக்கு 2-3 கப் பாதுகாப்பான வரம்பு. உடல் எடையை குறைப்பதன் நன்மைகளை அதிகரிக்க, பிளாக் காபி அல்லது குறைந்த பால் மற்றும் சர்க்கரை சேர்க்காமல் குடிக்கவும். கிரீம் மற்றும் சர்க்கரை போன்ற உயர் கலோரி சேர்க்கைகள் எடை இழப்பு நன்மைகளை எதிராக இருக்கும். உங்களுக்கு காபி ஒத்துக் கொள்கிறதா இல்லையா என்பதை பார்த்து அதனை குடிப்பது குறித்து முடிவெடுக்கவும். ஆரோக்கிய பிரச்சனை இருப்பவர்கள் கட்டாயம் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் மட்டுமே காபி குடிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.
மேலும் படிக்க | கீழே போடாதீர்கள்.. கறிவேப்பிலை சாப்பிட்டால் நடக்கும் 10 அதிசயம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ