Viral Video: தில்லான ஆசாமி தான்... ஆக்டோபஸிடம் சிக்கியும் அஞ்சாத நபர்..!!

வைரலாகி வரும் வீடியோவில், ஒரு நபரின் முதுகில் அக்டோபஸ் ஒன்று ஒட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். அதனிடம் இருந்து விடுபட அவரும் அவருக்கு அருகில் உள்ளவர்களும் முயலுகின்றனர். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 1, 2023, 03:37 PM IST
  • பசிபிக் பெருங்கடலில் வாழும் ராட்சத ஆக்டோபஸ்தான் உலகிலேயே மிகப்பெரிய ஆக்டோபஸ்.
  • ஆக்டோபஸ் ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது.
  • எட்டு கைகள், பெரிய கண்கள் மற்றும் குமிழ் வடிவ தலைகள் கொண்ட ஆக்டோபஸ்.
 Viral Video: தில்லான ஆசாமி தான்... ஆக்டோபஸிடம் சிக்கியும் அஞ்சாத நபர்..!! title=

இணைய தளம் என்பது தகவல்களை அள்ளித்தரும் களஞ்சியமாக உள்ளது. அதன் மூலம் பலவிதமான தகவல்களையும் வீடியோக்களையும் ஆடியோக்களையும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையில், இவை நிச்சயம் நமது டென்ஷனை குறைத்து மனதை லேசாக்குகின்றன என்றால் மிகை இல்லை. 

சமூக வலைதளத்தில், மிகவும் அபூர்வமான கடல் வாழ்க்கை அல்லது காட்டு வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையிலான பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. இதற்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம் உண்டு. அதோடு, மனிதர்கள் சில விலங்குகள், உயிரினங்கள் ஆகியவற்றுடம் ஏற்படும் மோதல்கள் அல்லது உறவு பரிமாற்றங்கள் குறித்த வீடியோக்களும் மிகவும் வைரல் ஆகும். அந்த வகையில் ஆக்டோபஸ் ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது.  

வைரலாகி வரும் வீடியோவில், ஒரு நபரின் முதுகில் அக்டோபஸ் ஒன்று ஒட்டிக் கொண்டிருப்பதைக் காணலாம். அதனிடம் இருந்து விடுபட அவரும் அவருக்கு அருகில் உள்ளவர்களும் முயலுகின்றனர். ஆனால், அது அத்தனை லேசாக விடுவிக்க மாட்டேன் என்கிறது. முதுகில் அக்டோபஸ் ஒட்டிக் கொண்ட நபர் முதுகு முழுவதிலும் பச்சை வேறு குத்திக் கொண்டுள்ளார். வைரலாகும் வீடியோவை கீழே காணலாம். 

வைரலாகும் ஆக்டோபஸ் வீடியோ

ஆக்டோபஸ் ஒரு கடல்வாழ் உயிரினம். எட்டு கைகள், பெரிய கண்கள் மற்றும் குமிழ் வடிவ தலைகள் கொண்டவை. மூன்று இதயங்கள் கொண்ட இந்த உயிரினம் நீல நிற ரத்தம் கொண்டது. மேலும் இது ஒரு முதுகெலும்புகலற்ற உயிரினம். அக்டோபஸில் பல வகைகள் உண்டு. அதில் சில விஷத் தன்மை கொண்டவை. ஆக்டோபஸ்சின் விஷம் உடலில் ஏறினால்,  டெட்ரோடோட்டாக்சின், ஹிஸ்டமைன், ட்ரிப்டமைன் போன்ற நச்சுக்களை உடல் உற்பத்தி செய்யும். இந்த விஷம் மனித உடலில் பரவினால் பார்வை இழப்பு, மூச்சுப் பிரச்னைகள், இருதய பாதிப்புகளை ஏற்படுத்தும். சில சமயங்களில் இறப்பு நிகழவும் வாய்ப்பு உள்ளது

ஆக்டோபஸ்சில் ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட வகைகள் உன்டு. பசிபிக் பெருங்கடலில் வாழும் ராட்சத ஆக்டோபஸ்தான் உலகிலேயே மிகப்பெரிய ஆக்டோபஸ். பெரும்பாலும் அவை கடல்களையும், கடற்பரப்புகளையும் உறைவிடமாகக் கொண்டிருக்கும். நண்டுகள், இறால்களை உணவாகக் கொள்ளும். பொதுவாக ஆக்டோபஸ் 16 அடி வரை வளரக் கூடியது. 50 கிலோ எடை கொண்டதாகவும் இருக்கும். 

மேலும்  படிக்க |   கடவுள் இருக்கான் குமாரு... முட்டையை அபேஸ் செய்த பாம்பிற்கு ஏற்பட்ட கதி!

சமீபத்தில் சில நாட்களுக்கு முன், தவளை  ஒன்று பாம்பை கபளீகரம் செய்யும் வீடியோ ஒன்றும் வைரலானது. பொதுவாக, பாம்பு என்றால் படையே நடுங்கும். பாம்பின் பெயரை கேட்டால் நூறு காத தூரம் ஓடும் மனிதர்கள் பலரை நாம் பார்த்திருப்போம். ஆனால், இங்கே தவளை ஒன்று பாம்பை சர்வசாதாரணமாக விழுங்குவதை பார்த்தால் நிச்சயம் நீங்கள் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். சுமார் 2 நிமிடங்கள் நீடித்த அந்த வீடியோ ஒரு திரில்லர் படம் பார்ப்பதைப் போல் இருந்தது. இந்த வீடியோவில் தவளை மெதுவாக பாம்பை ரசித்து ருசித்து பாம்பை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்குவதைக் காணலாம். இந்த வீடியோவை கீழே உள்ள இணைப்பில் காணலாம். 

மேலும்  படிக்க |  கலிகாலம் தான்... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை... திகிலூட்டும் வீடியோ!

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News