இந்தியாவில் Porn Website-களை அனுக புது யுக்தி கையாளும் Browsers...

இந்தியாவில் ஆபாச வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உலவி எனப்படும் பிரவுசர்கள் புதிய யுக்திகளை கையாண்டு ஆபாச வலைதள சேவையினை வழங்கி வருகின்றன...

Updated: Dec 3, 2018, 09:54 AM IST
இந்தியாவில் Porn Website-களை அனுக புது யுக்தி கையாளும் Browsers...
Representational Image

இந்தியாவில் ஆபாச வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், உலவி எனப்படும் பிரவுசர்கள் புதிய யுக்திகளை கையாண்டு ஆபாச வலைதள சேவையினை வழங்கி வருகின்றன...

உத்தரகண்ட் உயர்நீதிமன்ற கோரிக்கையினை ஏற்று கடந்த செப்டம்பர் 27-ஆம் நாள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள 857 அடல்ட் இணையதளங்களுக்கு உச்சநீதிமன்றம் தடைவித்தது.

இதனையடுத்து இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது பயனர்களின் இணைப்பில் குறிப்பிடப்பட்ட அடல்ட் இணையதளங்களை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்தது. இந்த உத்தரவை அடுத்து Airtel, Jio உள்ளிட்ட பல டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களின் இணைப்பில் இருந்து அடல்ட் இணையதளங்களை அனுகுவதற்கு தடை விதித்துள்ளது. 

மத்திய அரசு, டெலிகாம் நிறுவனங்கள் என பலரும் ஆபாச படங்கள் பரவுவதை தடுத்து வர முயற்சிக்கும் நிலையில் உலவி என கூறப்படும் Browser-கள் VPN உதவியுடன் தடை செய்யப்பட்ட ஆபாச வலைதளங்களை வழங்கி வருகின்றது என்னும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சீன தயாரிப்பு உலவியான UC browser ப்ரத்தியேக VPN-கை பயன்படுத்தி தடை செய்யப்பட்ட ஆபாச வலைதளங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றது எனவும், அதேப்போல் Opera browser உள்கட்டமைப்புடன் கூடிய VPN-களை பயன்படுத்தி வாடிக்கையாளர்களக்கு தடை செய்யப்பட்ட வலைதளங்களை வழங்கி வருவதாகவும் மத்திய தொலைத்தொடர்பு துறை கண்டறிந்துள்ளது.

இந்த ப்ரத்தியேக VPN-கள் மூலம், பயனர்கள் தங்களது சொந்த டொமைன்களையும் வேறுநாட்டு IP விலாசத்தினை கொண்டு பதிவேற்ற இயலும் என்பதால் இந்திய மக்களும் இந்த சேவையினை பயன்படுத்தி ஆபச படங்களை பதிவேற்றி வருகின்றது.

தொலைத்தொடர்பு துறை அதிகாரிகள் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் இந்தியாவில் இருந்து அதிகப்படியான ஆபாச வலைதள URL-கள் செயல்படும் பகுதி ஹரியானா, பிஹார் என தெரியவந்துள்ளது. இந்த குற்றச்செயல்களில் ஈடுப்படும் நபர்களை அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

முன்னதாக கடந்த 2015-ஆம் ஆண்டு, குழந்தைகளின் ஆபாச படங்களை கொண்டுள்ள இணையதளங்களை முடக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது!