Pushpa: வார்னரையும் விட்டுவைக்காத புஷ்பா - வைரல் வீடியோ

புஷ்பா படத்தின் ’ஸ்ரீவல்லி’ பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் வார்னர் செய்திருக்கும் ’டப்மாஷ்’ இன்ஸ்டாவில் டிரெண்டாகியுள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 1, 2023, 10:26 PM IST
  • புஷ்பா பாடலுக்கு நடனமாடியிருக்கும் வார்னர்
  • இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட வீடியோ
  • அல்லு அர்ஜூனை இமிடேட் செய்திருக்கிறார் வார்னர்
Pushpa: வார்னரையும் விட்டுவைக்காத புஷ்பா - வைரல் வீடியோ title=

அல்லு அர்ஜூன் - ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ’புஷ்பா தி ரைஸ்’ திரைப்படம் மாஸ் ஹிட் அடித்தது. திரையிட்ட இடங்களில் எல்லாம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற அந்தப் படம், வசூல் மழையிலும் நனைந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜூனின் கெட்டப் மற்றும் பாடலும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தது. கிரிக்கெட் வீரர் ரவீந்தர் ஜடேஜா கூட புஷ்பா லுக்கில் புகைப்படம் ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருந்தார். 

ALSO READ | Video: இசைக்கருவியை எரித்து தாலிபான் அட்டூழியம்; கண்ணீர் சிந்தும் இசைக் கலைஞர்!

குறிப்பாக, ’ஊ சொல்றியா மாமா’ பாடல் தாறுமாறு ஹிட். சமந்தாவின் நடனத்தில் வெளியான இந்தப் பாடல் இந்தியா மட்டும்மல்ல உலகளவிலும் ஹிட் அடித்து மூளைமுடுக்கெல்லாம் ஒலித்து வருகிறது. கவர்ச்சி புயலாக சமந்தா உருவெடுத்ததுடன் நடனத்திலும் அசத்தியிருந்தார். இந்த ஒரு பாடலுக்கு நடனமாட சுமார் 5 கோடி ரூபாய் சமந்தா ஊதியம் பெற்றதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இந்தப் படத்தில் வரும் மற்றொரு பாடலான ‘ஸ்ரீவல்லி’ பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடனமாடி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியிருக்கும் அந்தப் பாடலுக்கு அல்லு அர்ஜூன் கெட்டப் போட்டு அவர் ஆடும் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அதிலும், வலது பக்கமாக நடந்து செல்லும்போது, வார்னரின் செருப்பு கழன்றுவிடுவது, காண்போரை சிரிக்க வைத்துவிடுகிறது. இதுவரை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். பலர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வருகின்றனர்.

ALSO READ | Super Tigress Mom பெண்புலியின் இறுதிச்சடங்கு சமூக ஊடகங்களில் வைரல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News