‘தர்பார்’ படம் குறித்த அடுத்த அறிவிப்பை வெளியிட்ட AR. முருகதாஸ்!

தர்பார் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குனர் AR முருகதாஸ் தெரிவித்துள்ளார்!

Updated: Jul 25, 2019, 02:16 PM IST
‘தர்பார்’ படம் குறித்த அடுத்த அறிவிப்பை வெளியிட்ட AR. முருகதாஸ்!

தர்பார் படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குனர் AR முருகதாஸ் தெரிவித்துள்ளார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167வது படமான தர்பார் படத்தை AR முருகதாஸ் இயக்கி வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, போலீஸ் வேடத்தில் ரஜினி நடித்து வருவதால் ரசிகர்களிடம் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, சுனில் ஷெட்டி, பிரத்தீக் பாபர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். பேட்ட படத்தை தொடர்ந்து தர்பாருக்கு அனிருத் இசையமைக்கிறார். 20 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளார் சந்தோஷ் சிவன். 

இந்நிலையில் தர்பார் படத்தின் அடுத்த அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் AR முருகதாஸ். இதனையடுத்து என்ற #Darbar என்ற ஹேஷ்டாக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. போலீஸ் உடையில் இருக்கும் ரஜினியின் புகைப்படத்தை பகிர்ந்து, அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருப்பதாக அவரது ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.