காற்றில் மிதக்கும் மலைப்பாம்பு, அதன் பிடியில் ஒரு கிளி: வைரலான கிலியூட்டும் காட்சி

Giant Python Viral Photo: காற்றில் தொங்கிக் கொண்டு கிளியை வேட்டையாடிய ராட்சத மலைப்பாம்பு ஒன்று தலைகீழாகத் தொங்குவதை காட்டும் புகைப்படம் ஒன்று தற்போது வைரல் ஆகிறது. இந்தப் படம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 23, 2022, 07:11 PM IST
  • சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்களு படங்களும் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீக காலங்களில் பாம்புகளின் வீடியோக்களும் புகைப்படங்களும் பட்டையை கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
காற்றில் மிதக்கும் மலைப்பாம்பு, அதன் பிடியில் ஒரு கிளி: வைரலான கிலியூட்டும் காட்சி title=

வைரல் புகைப்படம்: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித புகைப்படங்களை நாம் தினமும் காண்கிறோம்.

சமூக வலைத்தளன்களில் பல வித வினோத வீடியோக்களு படங்களும் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீக காலங்களில் பாம்புகளின் வீடியோக்களும் புகைப்படங்களும் பட்டையை கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

காற்றில் தொங்கிக் கொண்டு கிளியை வேட்டையாடிய ராட்சத மலைப்பாம்பு ஒன்று தலைகீழாகத் தொங்குவதை காட்டும் புகைப்படம் ஒன்று தற்போது வைரல் ஆகிறது. இந்தப் படம் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்க | முதலையை விழுங்கும் மலைப்பாம்பு: திகிலூட்டும் வீடியோ வைரல் 

ஆஸ்திரேலியாவில் உள்ள பாம்புகளை அகற்றும் வணிக நிறுவனமான சன்ஷைன் கோஸ்ட் ஸ்னேக் கேட்சர்ஸ் 24/7 இல் (Sunshine Coast Snake Catchers 24/7) பணிபுரியும் ஸ்டூவர்ட் மெக்கென்சி, சமூக ஊடகங்கமான ஃபேஸ்புக்கில் பாம்புகளின் படங்களை வெளியிட்டார்.

இந்த படத்தில், ஒரு ஆபத்தான மலைப்பாம்பு கூரையில் இருந்து தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கிறது. மலைப்பாம்புடன் பறவையின் இறக்கைகளையும் காண முடிகிறது. பாம்பு, பறவையின் தலையை தன் உடலால் போர்த்தி அசையக்கூட வாய்ப்பளிக்காமல் பிடித்துள்ளது. 

படத்தைப் பகிர்ந்துள்ள ஸ்டூவர்ட் மெக்கென்சி, அந்த பதிவின் தலைப்பில், 'இயற்கை ஒரே நேரத்தில் நம்பமுடியாததாகவும் கொடூரமாகவும் இருக்கும்! பாம்புகள் அவ்வப்போது அழகான பறவைகளைப் பிடித்து விழுங்குகின்றன. ஆனால் பாம்புகளை பொறுத்தவரை அவை உயிர் வாழ்வதற்கு உணவை தேடுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமது சூழலில் பாம்புகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன, அவற்றுக்கு உரிய மரியாதையை வழங்குங்கள்.’ என்று எழுதியுள்ளார். 

இந்த படங்கள் பகிரப்பட்டது முதல் வைரலாகி வருகிறது. இதற்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்டுகள் கிடைத்துள்ளன. ஒரு பயனர், ‘இயற்கை அற்புதமானது’ என எழுதியுள்ளார். 

மற்றொரு பயனர், 'மற்ற ஜீவன்கள் உயிர் வாழ என்ன செய்கின்றனவோ அதைதான் பாம்பும் செய்கிறது’ என எழுதியுள்ளார். 

மேலும் படிக்க | நண்பன் ஒருவன் வந்த பிறகு..நண்பனை உயிரை கொடுத்து காப்பாற்றிய குரங்கு! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News