தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் பொய்யானது என்று கூறி நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மீது ரூ.5 கோடி கோட்டு அர்ஜூன் மன நஷ்ட வழக்கு பதிவு செய்துள்ளார்.
கடந்த சில தினங்களாக சமூக ஊடங்களில் #MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்களுக்கு எதிராக பாலியல் புகார்கள், குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றன. ஹாலிவுட்டில் பிரபலமாக துவங்கிய இந்த விவகாரம் இந்தியாவில் முதன்முறையாக பாலிவுட்டில் தனுஸ்ரீ தத்தா துவங்கி வைத்தார். இவரைத் தொடர்ந்து தமிழகத்திலும் கடந்த ஒருமாத காலமாக இந்த விவகாரம் உலுக்கி வருகின்றது.
இந்நிலையில், சமீபத்தில் நடிகர் அர்ஜூன் மீது நெருங்கி வா முத்தமிடாதே, நிபுணன் போன்ற படங்களில் நடித்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தன்னிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதாக புகார் தெரிவித்திருந்தார்.
கன்னட உலகின் பிரபல நடிகை ஸ்ருதி ஹரிஹரன் இவர் மீது குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார். நடிகர் அர்ஜூன் உடன் 'விஸ்மயா' என்னும் திரைப்படத்தில் நடித்தப்போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இந்த புகார் குறித்து நடிகர் அர்ஜூன் மறுப்பு தெரிவித்தார்.
ஸ்ருதியின் குற்றச்சாட்டுக்கு பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். மேலும் அவரை கர்நாடக திரைப்பட சங்கத்தில் இருந்து தடை செய்ய வேண்டும் என்றும் சிலர் போராட்டம் நடத்தினர். பின்னர் அர்ஜூனின் மாமனாரான ராஜேஷ் கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் ஸ்ருதி மீது புகார் செய்தார். இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அர்ஜூன் மற்றும் ஸ்ருதி இடையே சந்திப்பை உருவாக்கி அதன் மூலம் பிரச்னைக்கு தீர்வு காண கர்நாடக திரைப்பட வர்த்தக சபை முடிவு செய்தது. அதன்படி கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் சமரச தீர்வை ஏற்க இருவருமே மறுத்துவிட்டனர். இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று சபை நிர்வாகிகள் கூறினர். இதையடுத்து, இத்தனை வருடங்கள் சினிமாவில் வாங்கிய நற்பெயரை கெடுக்கும் வகையில் ஸ்ருதி பொய்யான புகாரை கூறிவிட்டார் என நடிகர்அர்ஜன் ரூ. 5 கோடி நஷ்டஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.