செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்து சென்ற சல்மான்!

செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பாலிவுட் நடிகர் சல்மான் கான் பறித்துச் சென்ற வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது!!

Last Updated : Jan 29, 2020, 05:32 PM IST
செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பறித்து சென்ற சல்மான்!

செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை பாலிவுட் நடிகர் சல்மான் கான் பறித்துச் சென்ற வீடியோ இணையதளங்களில் பரவி வருகிறது!!

பாலிவுட் முன்னணி நடிகரான சல்மான் கான் படப்பிடிப்புக்காக கோவா மாநிலத்துக்குச் சென்றுள்ளார். அங்கு விமான நிலையத்தை விட்டு அவர் வெளியே வந்த போது, ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றார். இதனைக்கண்டு கோபமடைந்த சல்மான் கான், அந்த செல்போனை பறித்து கையோடு எடுத்துச் சென்றுவிட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த ரசிகர் செய்வதறியாது திகைத்து நின்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சல்மான் கானின் இந்த செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

அந்த வீடியோவில், வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்துள்ள சல்மானின் ரசிகர் ஒருவர் சல்மான் கானுடம்  செல்பி எடுக்க முயல்கிறார். அப்போது சல்மான் அவரது தொலைபேசியை படக் என பிடுங்கி செல்கிறார். இந்த வீடியோ காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சில நாட்களுக்கு முன்பு நடிகர் சிவக்குமார் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இது போன்ற நிகழ்வு நடந்ததை அப்போது நெட்டிசன்கள் அவரை வசைபாடியது குறிப்பிடதக்கது.  

More Stories

Trending News