'யாருப்பா நீ': கார் பைக் பயங்கர விபத்தில் சிக்கி அசால்டாய் நடந்துபோன நபர்: வைரல் வீடியோ

Accident viral Video: ஒரு விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதை பார்ப்பவர்கள் அதிர்ந்து போகிறார்கள். இவ்வளவு மோசமான விபத்தில் ஒருவரால் உயிர் பிழைக்க முடிகிறது என்பதை நம்மால் நம்ப முடியவில்லை.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 25, 2022, 03:49 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
'யாருப்பா நீ': கார் பைக் பயங்கர விபத்தில் சிக்கி அசால்டாய் நடந்துபோன நபர்: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

தினமும் உலகில் பல விபத்துகள் நடக்கின்றன. இவற்றை தடுக்க பலரும் பல முயற்சிகளை எடுத்தாலும், விபத்துகளை முழுமையாக முடக்குவது சாத்தியப்படவில்லை. ஒவ்வொரு நாளும் சாலை விபத்துகள் பற்றிய செய்திகள் உலகம் முழுவதிலுமிருந்து வந்து தலைப்புச் செய்திகளாகின்றன. உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லாத சில விபத்துகளிலும் சிலர் உயிர் பிழைக்கின்றனர். இப்படிப்பட்ட நிகழ்வுகள் மகிழ்ச்சியை அளிக்கின்றன.

மேலும் படிக்க | தில்லாலங்கடி கில்லாடி, திருதிருவென விழித்த போலீஸ்: வீடியோ பார்த்தா சிரிக்காம இருக்க முடியாது 

தற்போதும் அப்படி ஒரு விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதை பார்ப்பவர்கள் அதிர்ந்து போகிறார்கள். இவ்வளவு மோசமான விபத்தில் ஒருவரால் உயிர் பிழைக்க முடிகிறது என்பதை நம்மால் நம்ப முடியவில்லை. அந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் பல வித ரியாக்ஷன்கள் வந்த வண்ணம் உள்ளன. 

அதிர்ச்சிகரமான விபத்து

வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு நபர் ராங் சைடில் பைக்கை ஓட்டிக்கொண்டு சாலையில் வருவதை காண முடிகின்றது. மறுபுறம் பல கார்கள் வருகின்றன. அவற்றின் வேகமும் மிக அதிகமாக உள்ளது. அந்த நபரின் பைக் மீது கார் ஒன்று மோதுகிறது.

அந்த மோதலின் சத்தம் மிக வேகமாக ஒலிக்க, பைக்குடன் அந்த நபர் காற்றில் பறக்கிறார். அவரது பைக் நொறுங்கியது, ஆனால் அந்த நபருக்கு எதுவும் ஆகவில்லை. அவர் விழிந்து எழுந்து விசித்திரமாக செயல்படத் தொடங்குகிறார். 

பகீர் விபத்தின் வீடியோவை இங்கே காணலாம்: 

விபத்தில் சிக்கிய நபருக்கு கீறல் கூட படவில்லை
காரும் பைக்கும் மோதிய வேகத்தைப் பார்ப்பவர்கள் அதிர்ந்து போவார்கள். ஆனால், பைக் ஓட்டியவருக்கு கீறல் கூட ஏற்படவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.இந்த வீடியோ சில மணி நேரத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்படும் அளவுக்கு வைரலாகி வருகிறது. இது @ndagels என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Viral Video: மயில் ஆடி பார்த்திருப்பீங்க; பாடி பார்த்திருப்பீங்க; பறந்து பார்த்திருக்கிங்களா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News