Viral Video: சமூக ஊடகங்களில் பொதுவாக விலங்குகளின் வீடியோக்கள் அதிகமாக வைரல் ஆகின்றன. விலங்குகளின் வாழ்க்கையில் நாம் அருகில் சென்று பார்க்க முடியாத பல விஷயங்களை இந்த வீடியோக்களின் மூலம் நாம் காண்கிறோம். இதுமட்டுமின்றி மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் நடக்கும் சில சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் நாம் இவற்றின் மூலம் கண்டு களிக்கிறோம்.
அப்படி ஒரு வியக்க வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது ஆகி வருகின்றது. பொதுவாகவே பாம்பு என்றால் அனைவருக்கும் பயம் இருப்பதோடு ஆர்வமும் அதிகமாக இருக்கின்றது. பாம்பு என்ற பெயரை கேட்டாலே அனைவரும் பயந்து நடுங்குவோம். ஆனால் வீடியோவில் இதற்கு மாறான ஒரு விஷயத்தை காண முடிகின்றது.
சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் மிக வேகமாக செயல்பட்டு பாம்பிடமிருந்து தன் உயிரை காப்பாற்றிக் கொண்டதை நாம் பார்க்கிறோம். ஒரு நதிக்கரையில் இந்த சம்பவம் நடக்கின்றது. இங்கே ஒரு பெண் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் ஓய்வாக அமர்ந்திருக்கும் சமயத்தில் ஒரு பாம்பு அங்கு வேகமாக வருவதை காண முடிகின்றது. ஆனால் நொடிப்பொழுதில், மிகவும் சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு அவர் தன் உயிரை காப்பாற்றிக் கொள்கிறார்.
பாம்பு அவர் அருகில் வருவதைக் திடீரென்று கவனித்த அந்த பெண் கண்ணிமைக்கும் நேரத்தில் தன் கையால் பாம்பை பிடித்து விடுகிறார். அந்த பெண்ணின் இந்த வேகத்தையும், வீரத்தையும் பாம்பே எதிர்பார்த்திருக்காது. திடீரென பிடிபட்டதால் பாம்பாலும் அந்த பெண்ணை தாக்க முடியவில்லை. பிடித்த பாம்பை தூரமாக அந்த பெண் வீசி எரிகிறார். அருகில் இருப்பவர்கள் அனைவரும் இந காட்சியை கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்துபோகிறார்கள்.
மேலும் படிக்க | சுறா மீது குதித்து கடலில் சவாரி செய்த நபரின் வைரல் வீடியோ
பாம்பை பந்தாடிய பெண்ணில் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் humour_twettoss என்ற பக்கத்தில் பகிரப்ப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். பலர் பெண்ணின் வீரத்தையும் துணிச்சலையும் பாராட்டி வருகிறார்கள். பாம்புகள் அதிகம் உள்ள ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, பல பயனர்கள் இந்த பெண் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று ஊகித்துள்ளனர்.
வீடியோவில் பாம்பு வகை பற்றி குறிப்பிடப்படவில்லை. இந்த பெண் செய்தது சாகசமான செயல்தான் என்றாலும், பாம்பு தாக்க வரும்போது இவ்வளவு சுறுசுறுப்பாகவும், துணிச்சலாகவும் செயல்படுவது பயிற்சி பெற்ற ஒருவரால் மட்டுமே சாத்தியம் என்கின்றனர் நிபுணர்கள். பொதுவாக, பாம்புகளுடன் இதுபோன்ற நடத்தைகள் தவிர்க்கப்பட வேண்டும். இவை ஆபத்தானவை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இயற்கைக்கு மாற்றே இல்லை! அதிசயமூட்டும் ஆச்சரிய வீடியோக்கள்! ஜாலியா எஞ்ஞாய் பண்ணலாமே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ