திருமணத்தில் மணமகன் செய்த செயல்.. தலைகுனிந்த மணப்பெண்: வீடியோ வைரல்

Viral Video: இந்த வீடியோவை SwatKat என்ற பயனர் சமூக ஊடகமான ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இதுவரை 78 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடியோவை லைக் செய்துள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 27, 2023, 02:09 PM IST
  • இந்திய திருமணங்களில் பல விதமான சடங்குகள் நடக்கின்றன.
  • திருமணம் தொடர்பான வீடியோக்களில் பல்வேறு வகையான காட்சிகள் காணப்படுகின்றன.
  • திருமணம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
திருமணத்தில் மணமகன் செய்த செயல்.. தலைகுனிந்த மணப்பெண்: வீடியோ வைரல்

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

இந்திய திருமணங்களில் பல விதமான சடங்குகள் நடக்கின்றன. திருமணம் தொடர்பான வீடியோக்களில் பல்வேறு வகையான காட்சிகள் காணப்படுகின்றன. சில சமயம் மேடையிலேயே மணமகனுக்கும், மணமகளுக்கும் இடையே சண்டை தொடங்கிவிடும். சில சமயங்களில் மணமக்களின் சகோதர சகோதரிகளுக்கு இடையே வேடிக்கையான சண்டைகளும் நடப்பதுண்டு. திருமணம் தொடர்பான பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 

மேலும் படிக்க | முதலிரவு வீடியோவை பகிர்ந்த ஜோடி... விடிய விடிய மாப்பிள்ளை செய்த காரியத்தை பாருங்க! 

இதுமட்டுமின்றி நினைத்து நினைத்து சிரிக்கும் வகையில் பல நிகழ்வுகளும் திருமணங்களில் நடக்கின்றன. சமீபத்திலும் ஒரு வேடிக்கையான வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. மணமக்கள் இருவரும் திருமண மண்டபத்தில் உள்ளனர். அப்போது புரோகிதர் வேத மந்திரங்களை உச்சரித்து திருமணங்களை நடத்தி வருகிறார். அப்போது புரோகிதர், மாப்பிள்ளைக்கு மோதிர விரலில் குங்குமத்தை திலகமிடுமாறு அறிவுறுத்துகிறார். அப்போது தான் வேடிக்கையான ஒரு விஷயம் நடக்கிறது. அதை வீடியோவில் கண்டு நீங்கள் ரசியுங்கள்.

 

மாப்பிள்ளை அதை கவனித்த உடனேயே, அவர் ஓரமாக சென்று பேண்டை சரி செய்துகொள்கிறார். இந்த வீடியோவை பார்த்தவர்களால் தங்கள் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | Viral Video: மங்காத்தாவாக மாறிய மயில்! முட்டைகளை திருட வந்த சிறுமி அலறி ஓடிய சம்பவம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News