பெரிய ஆபத்து... போதையில் இருப்பவர்களிடம் ரொம்ப கவனம் - அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி வீடியோ

Viral Video Latest: போதை என்பது உடல் நலனுக்கும், மனநலனுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை இந்த வைரல் வீடியோ நமக்கு அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறது. இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Oct 28, 2024, 11:08 AM IST
  • இந்த சம்பவம் நேற்று முன்தினம் நடந்துள்ளது.
  • இதில் 2 பேர் கைதாகி சிறையில் உள்ளனர்.
  • நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித பெரிய காயமும் இல்லை.
பெரிய ஆபத்து... போதையில் இருப்பவர்களிடம் ரொம்ப கவனம் - அதிர்ச்சி அளிக்கும் சிசிடிவி வீடியோ

Viral Video Latest: போதை என்பது மிகவும் கொடூரமான ஒன்று. போதையால் அதனை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமின்றி, அவர்களை சுற்றி உள்ளவர்களுக்குமே ஆபத்தை விளைவிக்கக்கூடியது. அது தற்போது மற்றுமொரு முறை இந்த வைரல் வீடியோவின் மூலம் நிரூபமணமாகி உள்ளது. மது, போதை பொருள்களால் ஏற்படும் போதை என்பது உடல் நலனுக்கும், மனநலனுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை இந்த வைரல் வீடியோ நமக்கு அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறது. தற்போது வைரலாகி வரும் இந்த சிசிடிவி வீடியோ (CCTV Video Viral) குறித்தும், இச்சம்பவம் குறித்தும் இங்கு விரிவாக காணலாம். 

Add Zee News as a Preferred Source

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் (Hyderabad) பெட்ரோல் பம்ப் ஒன்றில் மதுபோதையில் இருந்த நபர் லைட்டரில் தீ வைத்து, சுற்றி இருந்தவர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவித்தார். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவம் கடந்த சனிக்கிழமை (அக். 26) இரவு 7 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தின் நாச்சரம் என்ற பகுதியில் உள்ள பெட்ரோல் பம்பில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

போதையில் இருந்தவரை சீண்டிய ஊழியர்

சிரண் என்ற நபர் அந்த பெட்ரோல் பம்பிற்கு அக். 26ஆம் தேதி இரவு 7 மணியளவில் வந்துள்ளார். அவரை பார்க்கும் போதே சற்று போதையில் இருப்பது தெரிந்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் கையில்தான் லைட்டர் (Lighter) இருந்திருக்கிறது. இவர் லைட்டரை கையில் வைத்திருப்பதை பார்த்த அருண் என்ற பெட்ரோல் பம்ப் ஊழியர் லைட்டரில் தீ பற்றவைக்கப்போகிறீர்களா என்ற அச்சத்தில் கேட்டுள்ளார். தொடர்ந்து, உங்களுக்கு தைரியம் இருந்தால் தீ வைத்துதான் பாருங்களேன் என அருண், சிரணை சீண்டியதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | கணவன் வீட்டுக்கு போக மாட்டேன் என அடம் பிடித்த மணமகள்: அழ வைக்கும் வைரல் வீடியோ

ஒரு நொடியில் பரவிய தீ...

ஊழியர் தன்னை சீண்டியதால், போதையில் இருந்த சிரண் அவர் பெட்ரோல் நிரப்பிக்கொண்டிருந்தபோது அதில் லைட்டரை பற்றவைத்தார். இது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. உடனே அங்கு நெருப்பு பற்றிக்கொண்டு சுற்றி பரவியது. அருகில் இருந்தவர்களை அச்சத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது. அந்த ஸ்கூட்டரும் எரிந்தது. உடனே அங்கிருந்த இரண்டு பெட்ரோல் பம்ப் ஊழியர்கள் அந்த தீயை அணைத்து பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்தனர். 

ஜஸ்ட் மிஸ்

இந்த சம்பவம் நடந்த இடத்தில் மொத்தம் 10, 11 பேர் இருந்தனர். அதிலும் குறிப்பாக, சிரண் தீ பற்றவைத்தபோது அருகில் ஒரு பெண்ணும் அவருடன் சிறுமி ஒருவரும் நின்றிருந்தனர்.  நல்வாய்ப்பாக, ஜஸ் மிஸ்ஸில் அவர்கள் அந்த தீயில் இருந்து தப்பித்தனர். மேலும் அங்கிருந்த அனைவரும் தீயை விட்டு தூரமாக ஓடத் தொடங்கினர். 

இருவரும் கைது

போலீசார் சிரணை மட்டுமின்றி பெட்ரோல் பம்ப் ஊழியர் அருணையும் சேர்த்தே கைது செய்துள்ளனர். இருவருமே பீகாரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. பொதுமக்களின் உயிருக்கு குந்தகம் விளைவிக்க முயன்றதாக இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் குறித்து நாச்சரம் காவல்துறை ஆய்வாளர் ஜி.ருத்வீர் குமார் கூறுகையில்,"இந்த ஆபத்தான செயல் உயிர்களை ஆபத்தில் சிக்கவைப்பது மட்டுமல்லாமல், ஒரு பேரழிவு வெடிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள இந்த பகுதியில் இது பெரிய விளைவை ஏற்படுத்தியிருக்கும்" என்றார். போதையில் இருந்த நபரை சீண்டியதை தொடர்ந்து இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. 

மேலும் படிக்க | பாம்பை காப்பாற்ற போராடும் பெண் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News