மக்களை அதிர்ச்சியடையச் செய்யும் அறிவியல் சோதனைகள் அன்றாடம் நடந்து கொண்டு இருக்கின்றன. அவற்றின் முடிவுகள் வியக்கத்தக்க வகையில் இருக்கும். அந்தவகையில், யூடியூபரும் பொறியாளருமான ஆலன் பான் என்பவர், பாம்புக்கு ரோபோ கால்களை உருவாக்கியுள்ளார். அதனை எவ்வாறு உருவாக்கினார் என்பதை அவரே தன்னுடைய யூடியூப்பிலும் தெரிவித்துள்ளார். பொதுவாக பாம்புகளுக்கு கால்கள் கிடையாது. ஆனால், அறிவியல் உலகில் எதுவும் சாத்தியம் என்பதை நிரூபிக்கும் வகையில் பாம்புகளுக்காக பிரத்யேகமாக ரோபோடிக் கால்களை உருவாக்கியிருக்கிறார் அவர்.
மேலும் படிக்க | குட்டி யானையை பிரசவிக்கும் தாய் யானை! வீடியோ இணையத்தில் வைரல்!
நேஷனல் ஜியோகிராஃபிக் அறிக்கையின்படி, மூட்டுகளின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் மரபணு ஊர்வனவற்றில் இன்னும் உள்ளது. இதுகுறித்து பேசும் ஆலன் பான், கால்கள் கொண்ட நீர்வாழ் உயிரினங்கள் இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். அப்படி இருக்கையில் பாம்புகளுக்கு ஏன் கால்கள் இருக்கக்கூடாது என்ற கேள்வியை எழுப்பியிருக்கும் அவர், இதுவே பாம்புகளுக்கு கால்கள் உருவாக்கத் தன்னை உந்தியதாக தெரிவித்துள்ளார். கடைசியாக ஒரு ரோபோடிக் உதவியுடன் பாம்பு நடப்பதை சாத்தியப்படுத்தியுள்ளார்.
அந்த வீடியோவில் ரோரோடிக் வடிவமைப்பு குறித்து கூறியிருக்கிறார் ஆலன் பான். சில நாட்களுக்கு முன்பு சமூகவலைதளங்களில் பதிவிட்ட அவரின் இந்த வீடியோ இதுவரை 2.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்துள்ளது. ஒரு சிலர் பாராட்டியிருந்தாலும், சிலர் விமர்சிக்கவும் தவறவில்லை. பாம்பு நடப்பதை பார்க்கும்போது வியப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள நெட்டிசன்கள், இப்படி ஒரு கண்டுபிடிப்பு தேவைதானா என்றும் வினவியுள்ளனர்.
மேலும் படிக்க | என் பிரண்ட போல யாரு மச்சான்! சேர் தூக்க உதவி செய்யும் நாய்க்குட்டி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ